Sunday, September 16, 2012

” பெற்றோர்களே கல்வியில் விழித்தெழுங்கள் ”


கிராமப்புற மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கோட்டகல்வி அலுவலகம் ஒழுங்கு செய்திருந்த ” பெற்றோர்களே கல்வியில் விழித்தெழுங்கள் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த பெற்றோரை அறிவுறுத்தும்  விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த வியாளக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி  இவ்விழிப்புணர்வு ஊர்வலத்தில் சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயம் , அல் ஜலால் வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்  கலந்து கொண்டனர்.
சிறுவர் உரிமை மற்றும் பாடசாலை கல்வியின் முக்கியத்துவம் உள்ளடங்கலாக பாடசாலை கல்வியினை இடைநிறுத்தும் ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வி பாதுகாப்பிற்கு முழு சமூகமும் பொறுப்பு கூறவேண்டியவராவார்கள் என்பதோடு பிள்ளைகள் அனைவரும் தினமும் பாடசாலைக்கு செல்வதனை உறுதிப்படுத்துவோம் என்பன போன்றவை விழிப்புணர்வு ஊர்வலத்தில் பெற்றோருக்கு வலியுறுத்தப்பட்டன.





No comments:

Post a Comment