Wednesday, September 26, 2012

கல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.றாபிக் இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார்.



கல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.றாபிக் இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறந்த கட்டுரையாளர் , எழுத்தாளர் மற்றும் கவிஞருமாவார்.

பாடசாலை காலத்தில் எழுத்துதுறையில் சிறந்து விளங்கிய இவர் ஆசிரிய பணியில் ஈடுபட்ட காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கி இருந்தார்.

அமைதியான போக்கு சிறந்த கருத்தாளமிக்க சிந்தனை போக்குள்ள இவரின் திடீர் மறைவு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு பேரிழப்பாகும்.

இவரின் பிரிவால் துயரடைந்துள்ள அவரின் குடும்பத்தினலுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதுடன் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க இறைவனை இருகரம் ஏந்தி பிராத்திக்கின்றோம்.

இவ்வண்ணம்
அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி

2 comments:

  1. அன்பால் ஆளும் அமைதியான சுபாவமுடைய ஆத்மா.

    இன்னும் லுமாலா மற்றும் ஹோண்டா ௫௦ மோட்டார் சைக்கிளில் (சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தியது , ) பவனிச்செல்லும் தோற்றம் இன்னும் மனத்திரையில் நிழலாடுகின்றது.. கைகளில் பத்திரிகைகள்(தினபதி, சிந்தாமணி வெளிவந்திருந்த மற்றும் அப்பாலுள்ள காலப்பகுதிகளாய் இருக்கும்.).ஆனால் இவரின் ஆத்மா இன்றுடன் இல்லாமல் ஆகி விட்டது. வாழ்வின் நியதி இது.தாங்கிக் கொள்கிறோம் யா அல்லாஹ்.

    இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன் .
    யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேன்மை பொருந்திய சொர்க்கத்தை அன்பளிப்பாயாக.

    மறைவில் துயரும் அனைவருக்கும் ஆறுதலை அளித்து அவருக்காக செய்யும் துஆக்களை அங்கீகரிப்பாயாக

    ReplyDelete
  2. இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன் .
    யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேன்மை பொருந்திய சொர்க்கத்தை அன்பளிப்பாயாக.

    ReplyDelete