Thursday, September 20, 2012

இடமாற்றம் பெற்றுச் சென்ற ஐந்து ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு


காரைதீவு கோட்டதுக்குட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் கடைமையாற்றி வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஐந்து ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பரதன் கந்தசாமி கலந்துகொண்டதுடன், விஷேட அதிதியாக
இப்பாடசாலையில் பிரதி அதிபராகக் கடைமையாற்றி, ஓய்வுபெற்ற பிரதி அதிபரும், சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீட தலைவருமான மௌலவி யூ.எல்.எம்.காசிம் அவர்கள் கலந்துகொண்டதுடன், பாடசாலையின் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பகற்போசனமும், இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.





No comments:

Post a Comment