Tuesday, September 18, 2012

கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக அப்துல் மஜீத் முஹம்மது நஜீப்


கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராக அப்துல் மஜீத் முஹம்மது நஜீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (18) செவ்வாய்க்கிழமை நண்பகல் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரம, , அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜயந்த , றிஸாத் பதியுதீன் , ஏ.எல்.எம்.அதாவுல்லா .மைத்திரிபால சிரிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்
கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 15 முஸ்லிம் உறுப்பினர்களுள் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் ஒரேயொரு உறுப்பினரான நஜீப் ஏ மஜீட்  மூதூர் பிரதேசத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமாகும்.
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு உணவு கூட்டுறவு துறை பிரதியமைச்சராக பதவி வகித்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.


No comments:

Post a Comment