Sunday, September 16, 2012

சாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் படகு இறங்கு துறையின் நிர்மாண பணிகள்


அம்பாறை மாவட்ட கரையோர ஆழ்கடல் மீனவர்களின் மிக நீண்ட காலத்தேவையாக இருந்துவந்த சாய்ந்தமருது தோணா முகத்துவார பிரதேசத்தில் மீனவர் படகு இறங்கு துறையின் நிர்மாண பணிகள் தற்போது துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
கடல்தொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு இபாட் நிறுவனத்தின் அனுசரணையில் இந் நிர்மாண பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது.
நிர்மாண பணிகளுக்கான முதற்கட்டமாக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இப்பிரதேச ஆழ்கடல் மீனவர்கள் கடல் கொந்தளிப்பு காலங்களில் தமது இயந்திர படகுகளை வெளிமாவட்டங்களிலுள்ள படகு இறங்கு துறைகளில் தரித்து வைத்தனர்.
இத்திட்டம் புர்த்தியானதும் இப்படகு இறங்குதுறை அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச மீனவர்கள் மிக நீண்ட காலம் எதிர்நோக்கி வந்த பாரிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும்.
இதன் முதற்கட்ட நிரமாண பணிகள் செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் நிறைவடையவுள்ளதாக இத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியிலாளர் தெரிவித்தார்.





No comments:

Post a Comment