கல்முனை பொலிஸ் நிலையத்தில் தேசிய பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கை பொலிஸ் உருவாக்கப்பட்டு 146 வருடங்கள் நிறைவை ஒட்டி கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த நானயக்கார தலைமையில் விஷேட அணிவகுப்பு , விஷேட உரை, அனைத்து சமயங்களின் ஆராதனைகள் இடம் பெற்றதுடன் யுத்தத்தில் உயிர் நீத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரார்த்தனையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் , இந்நாட்டுக்காக உயிர் நீத்த பொலிஸாரின் குடும்ப உறவினர்கள் உட்பட சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment