Saturday, September 29, 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேற்கொள்ள முடியாது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான விவகாரங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் சனிக்கிழமை கல்முனை பர்ஜீஸ் மண்டபத்தில் ஏற்பாடு


ஐக்கிய தேசியக்கட்சி , மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செய்வது போல் அரசை ஒட்டு மொத்தமாகப் பகைத்துக் கொண்டு, அரச விரோத அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் மேற்கொள்ள முடியாது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான விவகாரங்களைத் தெளிவுபடுத்தும் வகையில் சனிக்கிழமை கல்முனை பர்ஜீஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே – நாடாளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினால்தான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இல்லையென்றால், கிழக்கில் மீண்டும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென சர்வதேச நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. அவற்றையெல்லாம் தாண்டியே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நாம் வென்றெடுத்துள்ளோம்' . தேர்தல் நிறைவடைந்த பின்னர் அமெரிக்காவின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர் ரொபட் ஓ பிளக் இதற்காகவே இலங்கை வந்திருந்தார். இவைகளுக்கிடையில்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசும் சக்தியின் மூலமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

த .தே.கூட்டமைப்பின் அரசியலைப் போல், மு.கா. செய்ய முடியாது

கிழக்கு மாகாணசபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதென மு.கா. எடுத்த முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்விக்குட்படுத்தி வருவது கவலையளிக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியலைப் போல், மு.காங்கிரஸ் செய்ய முடியாது.

கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சியமைத்திருந்தால், முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக சிங்களப் பேரினவாதிகள் சத்தமிடத் தொடங்குவார்கள். கடைசியில் அது பெரும் ஆபத்தான முடிவினை ஏற்படுத்தும்.

த .தே.கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலை முன்வைத்தே முஸ்லிம்கள் குறித்துப் பேசியது. ஆனால், முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலான பேச்சுக்களை த.தே.கூட்டமைப்பு நேர காலத்துடன் ஆரம்பித்திருக்க வேண்டும்.

த .தே.கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் - அரச விரோத அரசியலுக்குப் பக்க பலமாக பல்வேறு தரப்புக்கள் உள்ளன. உலகெங்கும் வாழும் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச நாடுகளென நிறை உதவிகள் உள்ளன.தமிழ் இளைஞர்களுடைய தியாகம்தான் இலங்கையில் மாகாணசபை முறைமை ஏற்படுவதற்கு காரணமாகும். தமிழ் மக்களுடைய இந்த தியாகத்தினை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. சிறுபான்மை சமூகத்துக்கான தீர்வுத் திட்டமொன்றைப் பெறுவதற்காக, தமிழ் சமூகத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உழைக்கும்.

இதேவேளை , மாகாண முறைமையினை பெறுவதற்குக் காரணமாக இருந்த தமிழ் சமூகத்துக்கு கிழக்கு மாகாணசபையில் ஓர் அமைச்சுக் கூட வழங்கப்படவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.
என்று குறிப்பிட்டார்

எ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.


கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான எ.எம்.ஜெமீல் மற்றும் ஆர்.எம்.அன்வர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கிரம, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுகாதார கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார கழக வதிவிட பயிற்சி பாசறை


கல்முனை வலய கல்வி அலுவலகம் ஒழுங்கு செய்திருந்த கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் சுகாதார கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார கழக வதிவிட பயிற்சி பாசறை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்முனை வலய உடற்கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பாசறையில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட உதவி சாரண ஆணையாளர்களான எம்.ஐ.எம்.முஸ்தபா , கே.எம்.தமீம் , சாய்ந்தமருது கோட்ட கல்வி அலுவலக செயற்திட்ட உத்தியோஸ்தர் ஏ. றாசிக் மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்
இச் சுகாதார கழக மாணவர் பாசறையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 30 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Thursday, September 27, 2012

இம்மாதம் 23 ஆம் திகதி கல்முனை கடற்கரை பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது காணாமல் போன சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரின் ஜனாஸா இன்று ஒலுவில் அட்டப்பள பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


இம்மாதம் 23 ஆம் திகதி கல்முனை கடற்கரை பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது காணாமல் போன சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த  மீனவரின் ஜனாஸா இன்று ஒலுவில் அட்டப்பள பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த 52 வயதான எம்.வை.லத்தீப் என்பவர் இயந்திரப்படகு மூலம் தனது சக நண்பர்களான மீனவர்கள் இருவருடன் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் விழுந்து காணாமல் போய் இருந்தார். இவரது சடலத்தை தேடும் பணியில் கல்முனை துறையைச் சேர்ந்த மீனவர்கள்  ஈடுபட்டிருந்த போதிலும் சடலத்தை கண்டெடுக்க முடியாமல் போனது.
இன்று காலை இவரது ஜனாஸா ஒலுவில் கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கியதை அவதானித்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர் ஜனாஸா சாய்ந்தமருது பீச் பாக் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.ஐ.நஸ்ருல் இஸ்லாமினால் மரண விசாரணை இடம்பெற்று பின்னர் சாய்ந்தமருதில் இன்று மாலை  நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்முனை பிரதேச இளம் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான களநிலை பயிற்சி


அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேச இளம் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான களநிலை பயிற்சி திட்டத்தின் முன்னோடி செயலமர்வு இன்று கல்முனை ஹிமாயா பீச் றிசோட்டில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சுவிட்சலாந்தின் ஸ்கட் பௌண்டேசனின் நிறைவேற்று அதிகாரி மாக் ஸகட்ட மற்றும் பௌண்டேசனின் சர்வதேச இணைப்பாளர் செல்வி கிறிஸ்டியானா , இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி அனுர டி சில்வா, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.மனாப் , ஓய்வுபெற்ற சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா , அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம்.அமீர் அலி உட்பட சம்மேளனத்தின் நிர்வாக உத்தியோஸ்தர்கள் , உடற்கல்வித்துறை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Wednesday, September 26, 2012

ஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோர்களது சாய்ந்தமருதில் அமைந்துள்ள வீடுகள் மீது குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 .00 மணியளவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், உயர்பீட உறுப்பினருமாகிய ஏ.எல்.அப்துல் மஜீட் (முழக்கம் மஜீட்) மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது அமைப்பாளரும், உயர்பீட உறுப்பினருமாகிய எம்.ஐ.எம்.பிர்தௌஸ் ஆகியோர்களது சாய்ந்தமருதில் அமைந்துள்ள  வீடுகள் மீது குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.
வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் வீட்டிலிருந்த எவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக கல்முனை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் ஸ்தலத்துக்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.றாபிக் இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார்.கல்முனை கல்வி வலயத்தில் சமாதான கல்வி அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.றாபிக் இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் காலமானார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் சிறந்த கட்டுரையாளர் , எழுத்தாளர் மற்றும் கவிஞருமாவார்.

பாடசாலை காலத்தில் எழுத்துதுறையில் சிறந்து விளங்கிய இவர் ஆசிரிய பணியில் ஈடுபட்ட காலத்தில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கி இருந்தார்.

அமைதியான போக்கு சிறந்த கருத்தாளமிக்க சிந்தனை போக்குள்ள இவரின் திடீர் மறைவு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு பேரிழப்பாகும்.

இவரின் பிரிவால் துயரடைந்துள்ள அவரின் குடும்பத்தினலுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதுடன் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க இறைவனை இருகரம் ஏந்தி பிராத்திக்கின்றோம்.

இவ்வண்ணம்
அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பழைய மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா செலவில் புதிய நவீன கணணி கூடம்


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு 5 மில்லியன் ரூபா செலவில் புதிய நவீன கணணி கூடம்


சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இதுவரை எந்தவொரு சர்வதேச தன்னார்வு நிறுவனங்களாலும் புனருத்தானம் செய்யப்படாதிருந்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கு சுமார் 5 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்ட நவீன கணிணி கூடமொன்றினை உடனடியாக அமைக்குமாறு அம்பாறை மாவட்ட அரச அதிபர் நீல் த அல்விஸ் அதிகாரிகளை பணித்துள்ளார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் இன்று இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் நடமாடும் சேவையின் போது கூட்டாக விடுத்த வேண்டு கோளின் பேரிலேயே இந்த கணிணிகூடம் கிடைத்துள்ளது.இந்நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்களான கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் , அம்பாறை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி , கல்லூரி சிரேஸ்ட ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , என்.எம்.அன்வர் , சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் அதிகாரி ஏ.பி.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் கட்டி புர்தியாக்கப்படாத நிலையிலுள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் மூன்றாவது மாடி நிர்மாணபணிகள் மற்றும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு கல்லுாரி வளாகத்தினுள் சுமார் 45 மில்லியன் ரூபா செலவில் நிரமாணிக்கப்படவுள்ள மூன்று மாடி நிர்வாக கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
Monday, September 24, 2012

மாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

மாளிகைக்காடு இக்ராஹ் கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்வியகத்தின் பணிப்பாளர் எம்.ஏ.அஸ்வர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன் போது பரீட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு  பரிசில்களும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலை

2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவையினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் பிரதேச செயலக  உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி பயனாளிகள் மற்றும் கல்முனை மாநகரசபை ஊழியர்கள் கல்லூரி வளாகத்தினுள் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி


2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஒழுங்கு செய்துள்ள நடமாடும் சேவை  26. 09. 2012 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை  கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த சில்வா தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நடமாடும் சேவையில் ஜனாதிபதி செயலகம் உள்ளடங்கலாக 80 திணைக்களங்கள் மக்கள் சேவையை வழங்கவுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

Friday, September 21, 2012

இன்று ஜும் ஆ தொழுகையின் பின் கல்முனையில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

முஹம்மது நபி ( ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் உலக முஸ்லீம்களையும் ஆத்திரமடையச்செய்துள்ள அமெரிக்கர்களின் அடாவடித்தனததை கண்டித்து இன்று ஜும் ஆ தொழுகையின் பின் கல்முனையில் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.