Tuesday, August 28, 2012

கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்


கல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்.

கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் நிந்தவுர் அட்டப்பளம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியும் கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த சுப்பர் லைன் பஸ் கம்பனிக்கு சொந்தமான ஹெயர் பஸ்வண்டியும், அதே பக்கமாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் மோதுண்டதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
பஸ் சாரதி உரிய இடத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் பஸ்ஸுடன் கல்முனை பொலிஸ் வரை பயணித்து, கல்முனை பொலிசில் சரணடைந்துள்ளார்.

மரணமடைந்தவர்கள் கல்முனைக்குடி 13 நியு வீதியைச் சேர்ந்த முஹம்மட் ஹஸன் ஜெமீனா (35), எம்.எச். றைஹானா (26), எம். இர்பானா (24),  அக்தாஸ் அஹமட் (ஒன்னரை ) , அம்ஹர் அஹமட் (இரண்டரை , மற்றும் முச்சக்கரவண்டி சாரதியான எம். இஸ்ஸதீன் (50), ஆவார்கள்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





2 comments:

  1. இன்னாளிள்ளாகி வ இன்னா இளைய்கி ராஜிஊன் .

    யா ரப்புல் ஆலமினே , இவர்கள் எல்லோருடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அன்பளிப்பாக்கிடு.

    யா ரஹ்மானே , நீ இரக்கம் உள்ளவன், அவர்களின் கலா கதர் படியே அவர்களின் உயிரைப் பறித்தாய்..இவர்களின் இழப்பின் விவரணம் தரும் செய்திகளை படித்து கடல் கடந்து வாழும் எண்கள் இதயம் துடியாய் துடிக்கின்றது..
    இதயம் தாங்க மறுக்கிறது... இவர்களின் உடன் பிறப்புக்கள் எவ்வளவு பாடு படும் ? யா அல்லாஹ் , இவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருக்கும் பொறுமையும் சகிப்புத்தன்மையையும் கொடுத்து நேர் வழி காட்டு...அவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவாக்கி அவர்கள் எல்லோரின் வாழ்விலும் வளம் சேர்த்திடு.

    யா அல்லாஹ், அன்மைக் காலமாக எங்கள் பிரதேசங்களில் வாகன ஒட்டுதல் மூலம் அகோர விபத்துகள் ஏற்பட்டு மரணங்கள் சம்பவிக்கின்றன ..
    எங்கள் எல்லோரின் வாழ்விலும் நீயும் உன் தூதரும் பயிற்றுவித்த சுன்னத்துக்களை பேணி இறை வழியில் எங்கள் வாழ்வை அமைத்து உனது பாது காப்பை பெற நேர்வழி காட்டு. இனியும் இவ்வாறான கோர விபத்துகள் நடை பெறுவதை விட்டும் எங்களை பாது காத்திடு..
    http://www.facebook.com/jazeem

    ReplyDelete
  2. இன்னாளிள்ளாகி வ இன்னா இளைய்கி ராஜிஊன்
    http://www.facebook.com/abdulgafoor.mail

    ReplyDelete