Tuesday, August 21, 2012

அமைச்சர் பீ. தயாரெட்ன அண்மையில் கல்முனைக்கு விஜயம் செய்தார்.


கல்முனை மாநகரசபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளரும்  கல்முனைத்தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம்.றியாஸின்  ( பெஸ்டர்) அழைப்பின் பேரில் உணவு மற்றும் போசாக்கு அமைச்சர் பீ. தயாரெட்ன   அண்மையில் கல்முனைக்கு விஜயம் செய்தார்.
கல்முனை  மாரியார்  வீதி   மற்றும் சின்னத்தம்பி வீதி  ஆகியவை  மக நெகும திட்டத்தின் கீழ் கொங்கிறீட் கல் வீதியாக மாற்றுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் பீ.தயாரெட்ன வீதிக்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.
சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் புனருத்தானம் செய்யப்படும் இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ. எச்.றஹ்மானும் கலந்து கொண்டார்.




No comments:

Post a Comment