Sunday, August 19, 2012

கல்முனைக் கடற்கரையோரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2012.08.19) மாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதிங்கியது.


கல்முனைக் கடற்கரையோரத்தில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை (2012.08.19) மாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதிங்கியது.

கல்முனைக் கடற்கரையின் முனைப்பகுதியில் ( பழைய ஐஸ் தொழிற்சாலைக்கு முன்பாக) ஆண் ஒருவரின் சடலம் கரையோதிங்கியதைக் கண்ட மக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்கினர். அவ்விடத்திற்க வருகை தந்த கல்முனைப் பொலிஸார் சடலத்தை  அடையாளம் கண்ட பின் சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவலை வழங்கினர்.

அங்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிபதி மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

அச்சடலம் காரைதீவு ஆர்.கே.எம்.வீதியில் வசித்து வந்த செல்லத்துரை மும்மூர்த்தி (வயது 54) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் ஒருவரின சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் இவரைக்காணவில்லையென உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கும் வேளையில் இச்சடலம் கரையோதிங்கியுள்ளது
இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.




No comments:

Post a Comment