Tuesday, August 28, 2012


Kalmunai Beach.

” ஸஹிரியன் 90 ”


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்புகளில் கல்வி பயின்ற இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த மாணவர்கள் ” ஸஹிரியன் 90 ” எனும் ஒன்று கூடல் நிகழ்வொன்றினை கல்முனை பர்ஜீஸ் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தனர்.
அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற 22 வது ஒன்று கூடலின் போது கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் சிரார்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இராப் போசனமும் இடம்பெற்றன.
100 ற்கும் அதிகமான பழைய மாணவர்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டு கல்லூரி வாழ்க்கையில் இடம்பெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை பரிமாறிக் கொண்டதுடன் சுற்றுலா ஒன்றையும் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வுகளில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் பிரதம அதிதியாகவும் முன்னாள் அதிபர்களான கே.எல்.அபுபக்கர் லெப்பை , எம்.எம்.ஜுனைதீன் , ஏ.பீர் முஹம்மட் , எம்.எம்.இஸ்மாயில் , கல்லூரியின் தற்பேதய அதிபர் ஏ. ஆதம்பாவா , பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
கல்லூரி சரித்திரத்தில் முன்னாள் அதிபர்கள் ஒரே நேரத்தில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்


கல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்.

கல்முனை – அக்கரைப்பற்று வீதியில் நிந்தவுர் அட்டப்பளம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.10 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியும் கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு செல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்த சுப்பர் லைன் பஸ் கம்பனிக்கு சொந்தமான ஹெயர் பஸ்வண்டியும், அதே பக்கமாகப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் மோதுண்டதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
பஸ் சாரதி உரிய இடத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் பஸ்ஸுடன் கல்முனை பொலிஸ் வரை பயணித்து, கல்முனை பொலிசில் சரணடைந்துள்ளார்.

மரணமடைந்தவர்கள் கல்முனைக்குடி 13 நியு வீதியைச் சேர்ந்த முஹம்மட் ஹஸன் ஜெமீனா (35), எம்.எச். றைஹானா (26), எம். இர்பானா (24),  அக்தாஸ் அஹமட் (ஒன்னரை ) , அம்ஹர் அஹமட் (இரண்டரை , மற்றும் முச்சக்கரவண்டி சாரதியான எம். இஸ்ஸதீன் (50), ஆவார்கள்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, August 27, 2012கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.


செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கல்வி கோட்ட பணிமனையில் கோட்டகல்வி பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம் மேற்பார்வையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பின் போது அதிக எண்ணிக்கையான அரச உத்தியோஸ்தர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
நாளையும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
Sunday, August 26, 2012

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பாவியும் எரிக்கப்பட்டது.


மருதமுனையில் வெள்ளிக்கிழமை   ஜும்மா தொழுகைக்குப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பாவியும் எரிக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டம் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக இரண்டு கிலோமீற்றர் வரை சென்று மருதமுனை மேற்கு மேட்டு வட்டையில் 2004 சுனாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்டவர்களுக்காக கட்டப்பட்டு  எட்டு வருடங்களாக இன்னும் கையளிக்கப்படாத வீட்டுத்திட்டத்தில் முடிவடைந்ததுடன் அங்கு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுக்கு எதிர்ப்பபு தெரிவித்து அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

சுகாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்ட மக்களுக்காக அரசாங்கம் வீடுகளைக்கட்டிக் கொடுத்துள்ள நிலையில் இன்னும் அவ்வீடுகளை உரிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் அதை வேறு வழியில் பிரதேச செயலாளர்  துஷ்ப்பிரயோகம் செய்வதாகவும், அத்துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துமாரும் அதே வேளையில் தாம் எட்டு வருடங்களாக அனுபவித்து  வரும் கஷ்ட்டங்களை நீக்கி உடனடியாக உரியவர்களுக்கு வீடுகளை வழங்குமாறும்  இவ் அநிதிகளை செய்து கொண்டிருக்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடற்ற பிரதேச செயலாளர்  எம்.எம்.நௌபலை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமெழுப்பினார்கள்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்டவர்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்பாட்டத்தில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் இவ்வீட்டுத்திட்ட மக்கள் வீதியில் உணவு சமைத்து வீதியோரங்களில் குடும்பத்தோடு உணவுகளை உண்டனர்.

தங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பிரதேச செயலாளர் இடமாற்றம் பெறும் வரை தங்களது இப்போராட்டம் தொடரும் என அவ்வார்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

Tuesday, August 21, 2012

”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி”


”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளிலான விவசாயிகளிடையே சேதனப்பசளை உற்பத்தி பாவனையை வலுவுட்டும் வேலைத்திட்டம் காரைதீவு கமநலசேவை மத்திய நிலையத்தில் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத்திய அரசின் கமத்தொழில் அமைச்சின் அனுசரணையில் காரைதீவு கமநலசேவை மத்திய நிலைய விவசாய போதனாசிரியர் எஸ்.தவசீலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெயராஜன் பிரதம அதிதியாகவும் அம்பாறை பிராந்திய பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ .லத்தீப் , சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் பீ.கே.பி. முத்துக்குமார , சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் , நிந்தவுர் விவசாய போதனாசிரியர் எம்.வை.எம்.நியாஸ் , கிழக்கு மாகாண விவசாய போதனாசிரியர் என். ஜெகதீஸ்வரன் , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
காரைதீவு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு சேதனப்பசளையின் பாவனை சம்பந்தமாக விரிவான விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்முறை செயல்திட்டமும் இடம்பெற்றது.

” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு


கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் சுற்றாடலை அழகுபடுத்தும் ” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஒரேஞ் ரீ கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான சாமஸ்ரீ ஏ.எல்.ஏ.நாஸர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளை நட்டு ” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் இத்திட்டத்திற்கான அனுசரணையினையும் வழங்கி வைத்தார்.

கையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.


கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 25 முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 8 வது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியினை முன்னிட்டு அதன் பிரதான அனுசரணையாளர்களான மக்கள் வங்கி ஒழுங்கு செய்திருந்த வலைப்பந்தில் கையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.
கல்முனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஸி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை பிராந்திய மக்கள் வங்கி முகாமையாளர் டபிள்யு. எம்.ஆரியஞான பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பந்தை தாங்கிய ஊர்தி கல்முனை பிரதான வீதி வழியாக வலம் வந்து கல்முனை மக்கள் வங்கி கிளையின் முன்னால் நிறுத்தப்பட்ட போது வாடிக்கையாளர்களும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை வலைப்பந்தாட்ட அணியினரும் அதில் கையொப்பமிட்டதுடன் போட்டி நிகழ்ச்சியொன்றும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.