EDUFOCUS அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கல்முனை பிரதேச முன்னணி பாடசாலைகளின் கிறிக்கட் வீரர்கள் கலந்து கொள்ளும் SCHOOL STUDENTS PREMIER LEAGUE 2012 ( SSPL) கிறிக்கட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட் கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.ஏ.சலாம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியர் வை. தவஜீவன் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப் போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியர் யு.எல்.எம்.ஹிலால் மேற்கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment