Sunday, June 3, 2012

நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசமான சவளக்கடை கிராமத்திலுள்ள பல தரப்பட்ட மக்களுக்கும் சமூக சேவையாளர் , மக்கள் சேவகன் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் இன்று மாலை பல உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார்.


நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய பிரதேசமான சவளக்கடை கிராமத்திலுள்ள பல தரப்பட்ட மக்களுக்கும் சமூக சேவையாளர் , மக்கள் சேவகன் பேராசிரியர் எம்.ராஜேஸ்வரன் இன்று மாலை பல உதவிப்பொருட்களை வழங்கி வைத்தார்.
இறைவன் தனக்கு வழங்கியிருக்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு மனநிறைவு பெற்றுவரும் பேராசிரியர் எம். ராஜேஸ்வரன் இன மத வேறுபாடுகளுக்கப்பால் நின்று உதவி என்று வருகின்ற மக்களுக்கு சேவை செய்து வருகின்றார்.
 பாடசாலை கல்வியில் இடைவிலகிய மாணவர்களுக்கு பாசாலை உபகரணங்களையும் ,  வசதிகுறைந்த குடும்ப தலைவர் தலைவிகளுக்கு உடுதுணிகளையும்  , வலது குறைந்தோருக்கு உடுதுணிகளையும்  , விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தததுடன் எதிர் காலத்தில் இக்கிராம மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகளை கண்டறிந்து உதவி புரிவதாகவும் , நரடபெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5000 ரூபாவினை வங்கியில் வைப்பிலிடவுள்ளதாகவும் வாக்குறுதியளித்தார்.
சவளக்கடை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே.விஜயகாந் தலைமையில் சித்தி வினாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சித்தி வினாயகர் ஆலய தலைவர் கு.புவனரூபன் , ஆசிரியரும் ஊடகவியலாளருமான செல்லையா பேரின்பராஜா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment