Sunday, June 10, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் க.பொ.த.சாதாரண தர வகுப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பெற்றோர்களுடனான கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

க.பொ.த.சாதாரண தர பிரிவு பகுதித் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்று மேற்படி நிகழ்வில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா , பாட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டர்.

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்திற்குட்பட்ட லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தின் பொது மக்களின் பங்களிப்புடனான சுற்று மதிலுக்குரிய அடிக்கல் நடும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்திற்குட்பட்ட லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தின் பொது மக்களின் பங்களிப்புடனான சுற்று மதிலுக்குரிய அடிக்கல் நடும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை பிராந்திய வீதி  அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் புரவலர் கலாநிதி ஏ.எம்.றிஸ்வி பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , அம்பாறை மோட்டார் வாகன போக்குவரத்து பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் , சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் கல்லூரி அதிபர் ஐ.எல்.எம்.றஹீம் , மாளிகைக்காடு அந்நூர் ஜும் ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.பௌஸர் , ஸிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் முஸ்தபா , மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய அதிபர் ஏ.பி.முஜீன் , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , முன்னாள் அதிபர்களான ஏ.பீர் முஹம்மட் , ஐ.எல்.ஏ.மஜீட் , ஏ.ஏ.றஸுல் , எம்.ஐ.ஏ.ஜப்பார் , அல் ஹுசைன் வித்தியாலய ஆசிரியரும் இப்பாடசாலையின் முன்னாள் அதிபருமான ஜனுபா தௌபீக் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எம்.ஜப்பார் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் இப்பாடசாலை சுற்று மதில் இப்பிரதேச பொதுமக்களின் முழுப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Friday, June 8, 2012

” அறிவகத்தின்” வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபையின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் நெனசல ” அறிவகத்தின்” வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

நெனசல கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா கான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சட்டத்தரணி யு.எம்.நிஸார் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய உதவி கல்விப்பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி , கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஸ் ரீபன் மத்தியு , சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அப்துல் மஜீட் , கல்முனை அல் மஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.பரீட் உட்பட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கணணி துறையில் பல்வேறு பிரிவுகளிலும் கற்கை நெறியினை புர்த்தி செய்த 180 தமிழ் முஸ்லிம் மாண மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

Thursday, June 7, 2012

மாளிகைக்காடு இக்ராஹ் கல்லூரியில் பரீட்சைகளில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாளிகைக்காடு இக்ராஹ் கல்லூரியில் பரீட்சைகளில் கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் ஆசிரியர் எம்.ஏ.அஸ்வர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆசிரியர்களான   அல் ஜவாஹிர் , எம்.பௌஸான் , முஹமட் யஹ்யாகான் , இஸட்.எம்.நப்ரிஸ் , ஹக்கீம்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, June 4, 2012

கல்முனை பறகத் நலன்புரி அமைப்பினூடாக கல்முனை அல் மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகத்திற்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் ஒரு தொகுதி கடின பந்து கிறிக்கட் உபகரணங்களை அண்மையில் வழங்கியிருந்தார்.

கல்முனைக்குடியைச் சேர்ந்த சாய்ந்தமருது பெஷன் ஹவுஸ் உரிமையாளர் முஹம்மது றியாஸ் (வயது 29) விபத்தில் சிக்கி இன்று அகால மரணமானார்.

கல்முனைக்குடியைச் சேர்ந்த சாய்ந்தமருது  பெஷன் ஹவுஸ் உரிமையாளர் முஹம்மது றியாஸ் (வயது 29) விபத்தில் சிக்கி  இன்று அகால மரணமானார்.

நிந்தவூர் ஒலுவில் பிரதான வீதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் சிறிய ரக லோரி ஒன்றுடன் மோதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்க செல்லும் வழியிலே மரணமடைந்துள்ளார்.

கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் உயர் பீட உறுப்பினரான இவர் சிறிது காலம் வெளிநாட்டில் தொழில் புரிந்திருந்தார்.

இவ்விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

EDUFOCUS அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கல்முனை பிரதேச முன்னணி பாடசாலைகளின் கிறிக்கட் வீரர்கள் கலந்து கொள்ளும் SCHOOL STUDENTS PREMIER LEAGUE 2012 ( SSPL) கிறிக்கட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட் கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர்களான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.ஏ.சலாம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆசிரியர் வை. தவஜீவன் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப் போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனை கார்மல் பாத்திமாக் கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியர் யு.எல்.எம்.ஹிலால் மேற்கொண்டிருந்தார்.

Sunday, June 3, 2012

கல்முனை ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

கல்முனை ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசித் திருக்குளிர்த்தி நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வு இம்மாதம் 4 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
பிரதம புசகர் புபாலப்பிள்ளை சண்முகம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் மங்கள வாத்தியங்களுடன் அம்மன் ஊர்வலம் இன்று இடம்பெற்றது.