கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிதனையின் தாய் சேய் நலன் பிரிவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை எழுதிய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பிறந்த சிசுக்களுக்குமான உடனடி வைத்திய சேவை வழங்குவது தொடர்பான ” வழிகாட்டல் பொறிமுறை ” ( PROTOCOL FOR REFERRAL SYSTEM ) எனும் நூல் வெளியீட்டு விழாவினை இன்று ஏற்பாடு செய்திருந்தது.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் இலங்கை பிரதிநிதி (Ms) Lene K . Christiansen பிரதம அதிதியாகவும் , குடும்ப சுகாதார பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் Dr. Chithramele de silva மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் தேசிய திட்ட உத்தியோஸ்தர் Dr.Chandani Galwaduge , கிழக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. A.L.Allavudee ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment