கல்முனை பிரதேசத்தின் பாடசாலை கிறிக்கட் வரலாற்றில் சாதனை படைத்த மூத்த விளையாட்டுத்துறை ஆசிரியர் யு.எல்.எம்.ஹிலாலின் வழிகாட்டலில் EDUFOCUS அமைப்புடன் இணைந்து கல்முனை பிரதேச முன்னணி பாடசாலைகளின் கிறிக்கட் வீரர்கள் கலந்து கொள்ளும் SCHOOL STUDENTS PREMIER LEAGUE 2012 ( SSPL) கிறிக்கட் சுற்றுப் போட்டி தற்போது கல்முனையில் ஆரம்பமாகியுள்ளது.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் மேற்படி கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி , உவெஸ்லி உயர்தர பாடசாலை , கார்மல் பாத்திமாக் கல்லூரி , பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயம் , மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி , காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி , கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் , கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் , நிந்தவுர் அல் மதீனா வித்தியாலயம் , நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை , சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் , சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் , கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு தண்டர் ஸ்டோம் , எக்ஸ்றீம் பீனிக்ஸ் , பயர் கொமாண்டோஸ் மற்றும் சுப்பர் லியோ என்ற வகையில் விளையாடி வருகின்றனர்.
இச்சுற்றுப் போட்டிக்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் , கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் , கல்முனை இராணுபடை வீரர்கள் , கல்முனை கடற்படை அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி உள்ளீட்ட கிறிக்கட் ஆர்வலர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இச்சுற்றுப்போட்டியின் இறுதி நாள் அன்று பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment