Saturday, May 19, 2012

Cricket Score Board - கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் சிரேஸ்ட உடற்கல்விதுறை ஆசிரியர் யு.எல்.எம்.ஹிலாலின் பெரு முயற்சியினால் புனருத்தானம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.


கல்முனை தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹும் ஏ.எம்.சம்சுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த  கிறிக்கட் ஸ்கோர் போட் கல்லூரியின் சிரேஸ்ட உடற்கல்விதுறை ஆசிரியர் யு.எல்.எம்.ஹிலாலின் பெரு முயற்சியினால் புனருத்தானம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வில் பிரபல சட்டத்தரணியும் இக்கல்லூரியின் பழைய மாணவருமான ஆரிப் சம்சுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
திறப்பு விழாவினை முன்னிட்டு கல்முனை நீதிமன்ற வளாக அணிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர் அணிக்கும் இடையிலான சினேகபுர்வ கிறிக்கட் போட்டியொன்றும் இன்று இடம்பெற்றது.
20 ஓவர்கள் கிறிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆசிரியர் அணி 14.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை நீதிமன்ற வளாக அணியினர் 6.5 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களைப்பெற்று 9 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றனர்.








No comments:

Post a Comment