Wednesday, May 9, 2012

” உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்” ( Career Fair – 2012)


” உங்கள் எதிர்காலத்திற்கான திறவுகோல்” (  Career Fair – 2012) எனும் தொனிப்பொருளில் அமைந்த  தொழிற் சந்தையொன்று இன்று  புதன்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் கேட்போர் கூடத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் எம்.ஏ.சி. சல்பியா தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் பீடாதிபதிகள் , திணைக்கள தலைவர்கள் , தொழில்சார் நிபுணர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment