Thursday, May 24, 2012

இன உறவினை மேம்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் தொம்பே கல்விக் கோட்டத்தின் பூகோட குமாரி முல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.ஆசிம் தலைமையில் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்கிய குழு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினர்.

மற்றய சமய பாடசாலையின் கலை, கலாசாரம், கற்றல் கற்பித்தல்  நடவடிக்கைகள், பாடசாலை கட்டமைப்பு போன்ற விடயங்களை கற்றறிவதற்கான சந்திப்பாகவே இது அமைந்தது.
குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை ஆராதனையில் பங்கு கொண்டதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கைகுழுக்கி கலந்துரையாடியதுடன் பாடசாலையினை பார்வையிட்டு தகவல்களை திரட்டிக் கொண்டு பரிசுப்பொருட்களையும் பரிமாரிக் கொண்டனர்.

No comments:

Post a Comment