பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின வாசிப்பு போட்டியில் முதலாம் இடம் பெற்ற சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய மாணவி ஏ.ஏ.சாஜிதா அப்ராவுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் கரீம் தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதி வழியாக வெற்றிபெற்ற மாணவி திறந்த கெப் வாகனத்தில் அழைத்து வரப்பட்டபோது பொதுமக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment