சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சமூர்த்தி பயநுகரிகளுக்கு அதிகரிக்கப்பட்ட சமூர்த்திக் கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகளில் வைப்பிலிடப்பட்டு வங்கி கணக்கு புத்தகங்களை பயநுகரிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி சங்க கிளையில் இடம்பெற்றது.
சமூர்த்தி வங்கி கிளை முகாமையாளர் எஸ்.றிபாயா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஐ. அலியார் கௌரவ அதிதியாகவும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை , சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் , கணக்காளர் எம்.ஹுசைனா உட்பட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோஸ்தர்களும் , சமூர்த்தி வங்கிச் சங்க உத்தியோஸ்தர்களும் , சமூர்த்தி பயநுகரிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment