Saturday, May 12, 2012

அம்பாறை மாவட்ட வனபரிபாலன திணைக்களம் கல்முனை கல்வி மாவட்ட சுற்றாடல் முன்னோடி கழகங்களுடன் இணைந்து அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாடு சம்பந்தமாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நாடகப் போட்டியொன்றினை இன்று ஒழுங்கு செய்திருந்தது.


அம்பாறை மாவட்ட வனபரிபாலன திணைக்களம் கல்முனை கல்வி மாவட்ட சுற்றாடல் முன்னோடி கழகங்களுடன் இணைந்து அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் மேம்பாடு சம்பந்தமாக கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நாடகப் போட்டியொன்றினை இன்று ஒழுங்கு செய்திருந்தது.
வட்டார வன அதிகாரி எம்.ஏ. அபுல் ஜாயா தலைமையில் இடம்பெற்ற மேற்படி போட்டி நிகழ்வில் அம்பாறை மாவட்ட வன அதிகாரி ஏ.ஆர்.ஏ. முனசிங்க பிரதம அதிதியாகவும் உதவி மாவட்ட வன அதிகாரி ஏ.டி. ரொஸான் அல்விஸ் , கல்முனை பொலிஸ் நிலையநிரவாக பொலிஸ் அதிகாரி பி.டபிள்யு.டி.டி. ஆரியரெட்ன ஆகியோர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் நாடக போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் வன விரிவாக்கல் உத்தியோஸ்தர் எஸ்.எம்.சபீக் மேற்கொண்டிருந்தார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல பாடசாலைகள் கலந்து கொண்ட மேற்படி நாடகப் போட்டியில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை முதலாம் இடத்தைப் பெற்று 20,000 ரூபா பணப்பரிசினையும் , நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று 15,000 ரூபா பணப்பரிசினையும் ,  மாவடிப்பள்ளி அல் அஸ்றப் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தைப் பெற்று 10,000 ரூபா பணப்பரிசினையும் , சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் நான்காம் இடத்தினைப்பெற்று 5,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டன.
கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர், கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன் , கல்முனை முஸ்லிம் கோட்ட கல்வி அதிகாரி எம்.றஹீம் ,பகுதி வன அதிகாரி இப்னு மாஜா , வட்டார வன அதிகாரி மனோகரன் , வன விரிவாக்கல் உத்தியோஸ்தர் தியாகராஜா , வன வள கள உத்தியோஸ்தர்களான ஏ.எச்.எம்.கியாஸ் மற்றும் நியாஸ் எம் பக்கீர் உட்பட வன இலாகா உத்தியோஸ்தர்கள் , பாடசாலை அதிபர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.










No comments:

Post a Comment