Thursday, May 10, 2012

தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதுமாணி பட்டப்பின்படிப்பு பிரிவு வியாபார நிர்வாக முதுமாணி மற்றும் முகாமைத்துவ பட்டபின்படிப்பு டிப்ளோமா ஆகிய இரு பாடநெறிகளை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வினை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.

மலேசியா பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் அலி கதிபி பிரதம அதிதியாகவும்  , இலங்கை உல்லாச மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டீ.ஏ.சி.சுரங்கா சில்வா கௌரவ அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ,பதிவாளர் எச்.அப்துல் சத்தார் , வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி எம்.பி.எம்.அம்ஜத் , சிரேஷ்ட விரிவுரையாளர்களான திருமதி எப்.எச்.அப்துல் றவுப் , கே.எம்.முபாறக் ஆகியோர் அதிதிகளாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு பிரிவின் இணைப்பாளர் கலாநிதி ஆதம்பாவா ஜௌபர் தலைமையில் இவ் அங்குரார்ப்பண நிகழ்வு  இடம்பெற்றது.

No comments:

Post a Comment