Monday, May 21, 2012

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இணைந்து சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.சலீமின் 5 வருட சேவையின் புர்த்தியினை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்ட அஸ்றப் ஐக்கிய மைதானத்தில் பாராட்டு விழாவினையும் கிறிக்கட் சுற்றுப் போட்டியினையும் ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிமனையின் கணக்காளர் எச்.எம்.ஏ.றஸீட் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை  மற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , ஒரேஞ் டீ கம்பனி முகாமைத்துவ பணிப்பாளரும் கல்முனை ரோட்டரி கழக உப தலைவருமான சாமஸ்ரீ, தேசமானிய , சமூகஜோதி ,கலைச்சுடர், ஏ.எல்.ஏ.நாஸர் மற்றும் அல்ஹாஜ் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.நழீர், சுப்பர் லைன் போக்குவரத்து நிறுவன உத்தியோஸ்தர் ஏ.எம்.றியாத் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஹுசைன் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னாள் உதவி அதிபர் எம்.எம்.காசிம் , சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.பாடசாலை பிரதி அதிபர் எம்.நஸார் , சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர் எம்.ஐ.எம்.ஜுஹைர் , சிரேஷ்ட ஊடகவியலாளரும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , கலசம் டொட் கொம் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எப்.அப்துல் பாசித் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment