சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் சாந்தம் கிங்ஸ் இலவன் அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சலீம் டீ. எஸ். சவால் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணிக்கும் சாந்தம் கிங்ஸ் இலவன் அணிக்கும் இடையில் மூன்று சுற்றுக்களாக இடம்பெற்று மேற்படி போட்டியில் 3 – 0 என்ற அடிப்படையில் சகல சுற்றுக்களிலும் வெற்றி பெற்று சாந்தம் கிங்ஸ் இலவன் அணி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாந்தம் கிங்ஸ் இலவன் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாந்தம் சலஞ்சர்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 92 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. இச்சுற்றுப் போட்டி மூன்றிலும் முறையே சிறப்பாட்டக்காரர்களாக சாந்தம் கிங்ஸ் இலவன் அணியைச் சேர்ந்த ஏ.எம்.எம்.றியாத் , ஐ.எம்.கடாபி ( சாந்தம் கிங்ஸ் இலவன் அணி தலைவர்) எம்.சாஜித் ஆகியோரும் சகல துறை ஆட்டக்காரராக சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணியைச் சேர்ந்த ஏ.எம்.ஜஹானும் ( சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணித் தலைவர்) தெரிவு செய்யப்பட்டனர்.
போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஐ.எம்.கடாபி மேற் கொண்டிருந்ததுடன் போட்டிக்கு நடுவர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் எம்.டீ.எம்.றஜாயி மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உடற்கல்வித்துறை ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ் ஆகியோர் கடமையாற்றியதுடன் கிறிக்கட் வர்ணனையினை ஏ.எல்.எம்.ஆப்தீன் மேற் கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment