Wednesday, May 30, 2012

இன்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற மரைக்காயர் சபைக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவராக முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பிரதி அதிபர்   அல் ஹாஜ் வை.எம்.ஹனீபாவும் செயலாளராக முன்னாள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் அல் ஹாஜ் ஏ.எச். அப்துல் பஸீரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று சாய்ந்தமருது ஜும் ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற மரைக்காயர் சபைக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு இடம்பெற்றது.

Thursday, May 24, 2012

இன உறவினை மேம்படுத்தும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் தொம்பே கல்விக் கோட்டத்தின் பூகோட குமாரி முல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.ஆசிம் தலைமையில் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளடங்கிய குழு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினர்.

மற்றய சமய பாடசாலையின் கலை, கலாசாரம், கற்றல் கற்பித்தல்  நடவடிக்கைகள், பாடசாலை கட்டமைப்பு போன்ற விடயங்களை கற்றறிவதற்கான சந்திப்பாகவே இது அமைந்தது.
குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை ஆராதனையில் பங்கு கொண்டதுடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கைகுழுக்கி கலந்துரையாடியதுடன் பாடசாலையினை பார்வையிட்டு தகவல்களை திரட்டிக் கொண்டு பரிசுப்பொருட்களையும் பரிமாரிக் கொண்டனர்.

பஞ்ச பாண்டவர்கள் வரலாறு கூறும் பாண்டிருப்பு கிராம வரலாறு பற்றி திருமதி கமலாம்பிகை லோகித ராஜா எழுதிய " பத்தும் பதியமும்" நூல் வெளி யீட்டு வைபவம் அண்மையில் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில்  பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம பேச்சாளராக கலந்து கொண்டதுடன் ,நூலின் முதல் பிரதியை  எழுத்தாளர் உமாவரத ராஜனிடம் இருந்து  வெல்லாவெளி  சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர்  எஸ் கிருஷ்ணகுமார் பெற்றுக் கொண்டார்.

வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின வாசிப்பு போட்டியில் முதலாம் இடம் பெற்ற சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய மாணவி ஏ.ஏ.சாஜிதா அப்ராவுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின வாசிப்பு போட்டியில்  முதலாம் இடம் பெற்ற சாய்ந்தமருது  ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலய  மாணவி ஏ.ஏ.சாஜிதா அப்ராவுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.
   பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் கரீம் தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதி வழியாக வெற்றிபெற்ற மாணவி திறந்த கெப் வாகனத்தில் அழைத்து வரப்பட்டபோது பொதுமக்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த ஊர்வலத்தில்  ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, May 23, 2012

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த மசூர் சின்னலெவ்வை தனது 54 வது வயதில் இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த மசூர் சின்னலெவ்வை தனது 54 வது வயதில் இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார்.
இவர் இதற்கு முன்னர்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றி இருந்தார். இவரின் ஜனாஸா இன்றிரவு தனது சொந்த ஊரான அட்டாளைச் சேனையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த சமூக சேவையாளரும் பிரசித்து பெற்ற உதைபந்தாட்ட வீரருமான இவரின் பிரிவு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

கல்முனை பிரதேசத்தின் பாடசாலை கிறிக்கட் வரலாற்றில் சாதனை படைத்த மூத்த விளையாட்டுத்துறை ஆசிரியர் யு.எல்.எம்.ஹிலாலின் வழிகாட்டலில் EDUFOCUS அமைப்புடன் இணைந்து கல்முனை பிரதேச முன்னணி பாடசாலைகளின் கிறிக்கட் வீரர்கள் கலந்து கொள்ளும் SCHOOL STUDENTS PREMIER LEAGUE 2012 ( SSPL) கிறிக்கட் சுற்றுப் போட்டி தற்போது கல்முனையில் ஆரம்பமாகியுள்ளது.

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் மேற்படி கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி , உவெஸ்லி உயர்தர பாடசாலை , கார்மல் பாத்திமாக் கல்லூரி , பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயம் , மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி , காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி , கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் , கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் , நிந்தவுர் அல் மதீனா வித்தியாலயம் , நிந்தவுர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை , சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் , சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் , கணேஷா மகா வித்தியாலயம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு தண்டர் ஸ்டோம் , எக்ஸ்றீம் பீனிக்ஸ் , பயர் கொமாண்டோஸ் மற்றும் சுப்பர் லியோ என்ற வகையில் விளையாடி வருகின்றனர்.
இச்சுற்றுப் போட்டிக்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் , கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் , கல்முனை இராணுபடை வீரர்கள் , கல்முனை கடற்படை அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி உள்ளீட்ட கிறிக்கட் ஆர்வலர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இச்சுற்றுப்போட்டியின் இறுதி நாள் அன்று பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Monday, May 21, 2012

சம்மாந்துறை இலுக்குச்சேனை ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை யொன்று கெளரவ சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்றது .

சம்மாந்துறை இலுக்குச்சேனை ஜி.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில்  மூன்று நாள் சாரணர் பயிற்சிப்பாசறை யொன்று  கெளரவ  சாரண ஆணையாளர்எம்..எம்.முஸ்தபா   தலைமையில் நடைபெற்றது . 
இப்பாசறையின்  இறுதி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனைப்பிரதேச சபை உறுப்பினரும் மாவட்ட சாரண உதவி ஆணையாளருமானஎஸ்.எல்.முனாஸ் கலந்து சிறப்பித்ததுடன் இப்பாசறையில் புதிதாகசேர்ந்துள்ள  அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய மாணவர்களும்
முனவ்வரா
 வித்தியாலய மாணவர்களும்  பொறுப்பான ஆசிரியர்களும்இலுக்குச்சேனை  பாடசாலை அதிபர் .ஹாருடீன்  மற்றும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கடற்  அமைப்பின் தலைவர் .எம்.அபாஜுல்பான்ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.  பாசறையில் கலந்து கொண்டுவெற்றியீட்டிய சாரண மாணவருக்கு பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.பாயிஸ் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு தோணாவில் வளர்ந்து காணப்படும் ஒரு வகை புல் இனத்தை அகற்றும் பணி கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் செல்லையா இராசையா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்
காரைதீவு பிரதேச செயலகம் , காரைதீவு பிரதேச சபை , மாளிகைக்காடு பிரதேச கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் , காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தலைமையிலான பாடசாலை மாணவர்கள் இச் சிரமதான நிகழ்விற்கு புரண ஒத்துழைப்பு வழங்கி இருந்தனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இணைந்து சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.சலீமின் 5 வருட சேவையின் புர்த்தியினை முன்னிட்டு இன்று சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்ட அஸ்றப் ஐக்கிய மைதானத்தில் பாராட்டு விழாவினையும் கிறிக்கட் சுற்றுப் போட்டியினையும் ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிமனையின் கணக்காளர் எச்.எம்.ஏ.றஸீட் , சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை  மற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , ஒரேஞ் டீ கம்பனி முகாமைத்துவ பணிப்பாளரும் கல்முனை ரோட்டரி கழக உப தலைவருமான சாமஸ்ரீ, தேசமானிய , சமூகஜோதி ,கலைச்சுடர், ஏ.எல்.ஏ.நாஸர் மற்றும் அல்ஹாஜ் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலக கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.எம்.நழீர், சுப்பர் லைன் போக்குவரத்து நிறுவன உத்தியோஸ்தர் ஏ.எம்.றியாத் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஹுசைன் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னாள் உதவி அதிபர் எம்.எம்.காசிம் , சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.பாடசாலை பிரதி அதிபர் எம்.நஸார் , சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோஸ்தர் எம்.ஐ.எம்.ஜுஹைர் , சிரேஷ்ட ஊடகவியலாளரும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் , கலசம் டொட் கொம் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எப்.அப்துல் பாசித் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டி.

சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டுத்துறை பிரிவு ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட  15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில் சாந்தம் கிங்ஸ் இலவன் அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சலீம் டீ. எஸ். சவால் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணிக்கும் சாந்தம் கிங்ஸ் இலவன் அணிக்கும் இடையில் மூன்று சுற்றுக்களாக இடம்பெற்று மேற்படி போட்டியில் 3 – 0 என்ற அடிப்படையில் சகல சுற்றுக்களிலும் வெற்றி பெற்று சாந்தம் கிங்ஸ் இலவன் அணி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாந்தம் கிங்ஸ் இலவன் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாந்தம் சலஞ்சர்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 92 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. இச்சுற்றுப் போட்டி மூன்றிலும் முறையே சிறப்பாட்டக்காரர்களாக சாந்தம் கிங்ஸ் இலவன் அணியைச் சேர்ந்த ஏ.எம்.எம்.றியாத் , ஐ.எம்.கடாபி ( சாந்தம் கிங்ஸ் இலவன் அணி தலைவர்) எம்.சாஜித் ஆகியோரும் சகல துறை ஆட்டக்காரராக சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணியைச் சேர்ந்த ஏ.எம்.ஜஹானும் ( சாந்தம் சலஞ்சர்ஸ் இலவன் அணித் தலைவர்) தெரிவு செய்யப்பட்டனர்.
போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஐ.எம்.கடாபி மேற் கொண்டிருந்ததுடன் போட்டிக்கு நடுவர்களாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் எம்.டீ.எம்.றஜாயி மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உடற்கல்வித்துறை ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ் ஆகியோர் கடமையாற்றியதுடன் கிறிக்கட் வர்ணனையினை ஏ.எல்.எம்.ஆப்தீன் மேற் கொண்டிருந்தார்.

Sunday, May 20, 2012

கல்முனை தெற்கு முன்பள்ளி சம்மேளனம் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இப்பிரதேசத்தைச் சேரந்த 18 முன்பள்ளிகளை சேர்ந்த சிறார்களின் கலை நிகழ்வினையும் முன் பள்ளி ஆசிரியைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினையும் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் இணைப்பாளரும் தொழிலதிபருமான சரீப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும் கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கௌரவ அதிதியாகவும் , ஒரேஞ் டீ கம்பனி முகாமைத்துவ பணிப்பாளரும் கல்முனை ரோட்டரி கழக உப தலைவருமான சாமஸ்ரீ, தேசமானிய , சமூகஜோதி ,கலைச்சுடர்  ஏ.எல்.ஏ.நாஸர் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , தொழிலதிபர் அபுல் ஆசாத் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.