Thursday, April 19, 2012

சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவ மாணவிகளுக்கு ” சிப் தொற ” புலமைப்பிரிசில் வழங்கும் நிகழ்வு

க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர வகுப்புகளில் கல்வி பயிலும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவ மாணவிகளுக்கு ” சிப் தொற ” புலமைப்பிரிசில் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஸி.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இந்த புலமைப் பரிசிலை பெற்றுக் கொண்டனர்.
அத்துடன் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாவர்களுக்கு விசேட பரிசில்களும் சிறுவர் வாசிகசாலைகளுக்கு நூல்களும் வழங்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஸீர் , தற்போதய அதிபர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் . ஐ.எல்.ஏ.றஹீம் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஏ.மஜீட் , சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோஸ்தர் எம்.எம்.றஸீன் , சமூர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா , கணக்காளர் எம்.ஹுசைனா , கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான நிர்வாக உத்தியோஸ்தர் எம்.எஸ்.நளீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment