இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலின் அழைப்பின் பேரில் பிரித்தானிய டர்கம் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று அப்பல்கலைக்கழகத்தின் பேராசியர் நிக்லூபர் தலைமையில் மாணவர் கல்வி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் , எச்.ஈ.ரீ.ஸீ. பணிப்பாளர் கே.எம். முபாறக் , சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் , சமூக விஞ்ஞான பிரிவின் தலைவர் எம்.எம்.ஏ.ஜப்பார் , சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம்.ஏ.சமீம் , மாணவர் நலன்புரியின் தலைவர் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment