Monday, April 30, 2012

மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள தோணாவில் வளர்ந்து காணப்படும் ஒரு வகையான புல்லின் புவிலிருந்து வெளியாகும் துகள்களினால் சூழலுக்கு பலத்த சவாலொன்று ஏற்பட்டுள்ளது.


மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள தோணாவில் வளர்ந்து காணப்படும் ஒரு வகையான புல்லின் புவிலிருந்து வெளியாகும் துகள்களினால் சூழலுக்கு பலத்த சவாலொன்று ஏற்பட்டுள்ளது.
இப்புவிலிருந்து வெளியாகும் துகள்களினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வகையான கடி ஏற்படுவதுடன் சுவாச நோய்களும் ஏற்படுவதற்கு ஏதுவாகின்றது.
சூழலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இப் புல் இனத்தை முற்றாக அழிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பனர் எம்.எல்.துல்கர் நயீம் ( துல்ஸான்) முன்னெடுத்துச் செல்லவுள்ளார்.
இது சம்பந்தமாக நேரடியாக  நிலமையினை ஆராய்வதற்காக அண்மையில் இப்பாடசாலைக்கு விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர்  ,பாடசாலை  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் புல் வளர்ந்து காணப்படும் சூழலையும் பார்வையிட்டார்.







No comments:

Post a Comment