வரலாற்றில் முதன் முறையாக ரதுகல ஆதிவாசிகளின் புதுவருட விளையாட்டு விழா அண்மையில் ரதுகல துருலிய வனப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
ரதுகல ஆதிவாசிகளின் தலைவர் சுது வன்னிலா அத்தன்கையின் வழிகாட்டலில் இடம்பெற்ற மேற்படி விளையாட்டு விழாவில் இக் கிராமத்திலுள்ள 98 ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு விசேட விருந்தினராக பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா கலந்து கொண்டார்.இந்த நிகழ்வில் ஆதிவாசிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு ஆதிவாசிகளின் சிறுமிகள்அழகுராணி போட்டியிலும் பங்கு கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஆதிவாசிகளின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
No comments:
Post a Comment