சாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் கல்முனைஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி , சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகளிர்மகா வித்தியாலயம் , அல் ஹிலால் வித்தியாலயம் , அல் ஜலால் வித்தியாலயம் , அல் கமறுன் வித்தியாலயம் ,ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலை , லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயம் , றியாலுல் ஜன்னா வித்தியாலயம் ,எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் என்பன இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.விளையாட்டுப் போட்டிக்கு அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து வாகன பரிசோதகர் பொறியியலாளர்ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
No comments:
Post a Comment