Saturday, April 21, 2012

இலங்கையின் வரலாற்று பிரசித்திபெற்ற கல்முகை கடற்கரை பள்ளிவாசலின் 190 வது வருடாந்த கொடியேற்று விழா


இலங்கையின் வரலாற்று பிரசித்திபெற்ற கல்முகை கடற்கரை பள்ளிவாசலின் 190 வது வருடாந்த கொடியேற்று விழா  ( 23.04.2012) திங்கட் கிழமை அஸர் தொழுகையினை தொடர்ந்து மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ளது.
இந்தியாவின் நாகூரில் அடங்கப்பட்டிருக்கும் சங்கைக்குரிய சாஹுல் ஹமீத் வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
12 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இந்நிகழ்வில் மௌலூத் , றாதிப் , மார்க்க உபனியாசங்கள் மற்றும் இஸ்லாமிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் மே மாதம் 5 ஆம் திகதி மாலை கொடியிறக்கப்பட்டு கந்தூரி வைபவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.
கல்முனைகுடி  பெரியபள்ளிவாசல் நிர்வாகமும் கடற்கரை பள்ளிவாசல் நிருவாகவும் இணைந்து ஒழுங்கு செய்யவுள்ள இக்கொடியேற்ற நிகழ்விற்கான கொடிகள் கல்முனைக்குடி பெரிய பள்ளிவாசலில் இருந்து பள்ளிவீதி , றஹ்மானியா பள்ளிவீதி , சாஹிபு வீதி , பிச்சி பிலாவடி வீதி , செயிலான்வீதி , கடற்கரைப்பள்ளி வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்படும்.
இக்கொடியேற்ற நிகழ்வுகளில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலுமிருந்தும் பிற மாவட்டங்களிலுமிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வழமையாக கலந்து கொள்வார்கள்.




No comments:

Post a Comment