Monday, April 30, 2012

கடற்படையினரின் சமூகப் பொறுப்புப் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட, சாம்பூர் சந்தோஷாபுரம் சிவசக்தி மகா வித்தியாலய மாணவர்களுக்கு அண்மையில் பாடசாலைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.காத்தான்குடியில் ஜெய்கா திட்டத்தின் கீழ் சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் 6 வீதிகள் புனர்நிர்மாணம் செய்யும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இம்மாதம் 3 ஆம் திகதி வியாளக் கிழமை உலக பத்திரிகை ஊடக சுதந்திர தினம் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.


மல்வான அல் முபாறக் தேசியக் கல்லூரியின் 1990 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் 1992 ஆம் ஆண்டின் உயர்தர வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வு கல்லூரியின் கந்தவத்தை ஆரம்ப பிரிவு பகுதியில் அண்மையில் நடைபெற்றது
சிம்ஸ் கெம்பஸ் மாணவ மாணவிகள் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழுவுடன் இணைந்து வைத்தியசாலை வளாகத்தில் சிரமதான பணியொன்றினை மேற் கொண்டனர்.


சம்பத் வங்கியின் 208 வது கிளை கிழக்கு மாகாணத்தின் மூதூரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.


சம்பத் வங்கியின் 208 வது கிளை கிழக்கு மாகாணத்தின் மூதூரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்பத் வங்கியின் பிரதி பொது முகாமையாளர்  சமன்  ஹேரத் பிரதம அதிதியாகவும்  உதவி பொது மகாமையாளர் நாஜில் பாறூக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு கிளை அலுவலகத்தினை திறந்து வைத்தனர் .

Sampath Bank was declared open their 208 th new branch at Muttur recently.
Deputy General Manager Mr. Saman Herath and Assistant Manager Mr.Najill Farouk were participated as a chief Guest and Guest of honour respectivly  in this Opening ceremony.


மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள தோணாவில் வளர்ந்து காணப்படும் ஒரு வகையான புல்லின் புவிலிருந்து வெளியாகும் துகள்களினால் சூழலுக்கு பலத்த சவாலொன்று ஏற்பட்டுள்ளது.


மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள தோணாவில் வளர்ந்து காணப்படும் ஒரு வகையான புல்லின் புவிலிருந்து வெளியாகும் துகள்களினால் சூழலுக்கு பலத்த சவாலொன்று ஏற்பட்டுள்ளது.
இப்புவிலிருந்து வெளியாகும் துகள்களினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வகையான கடி ஏற்படுவதுடன் சுவாச நோய்களும் ஏற்படுவதற்கு ஏதுவாகின்றது.
சூழலுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இப் புல் இனத்தை முற்றாக அழிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பனர் எம்.எல்.துல்கர் நயீம் ( துல்ஸான்) முன்னெடுத்துச் செல்லவுள்ளார்.
இது சம்பந்தமாக நேரடியாக  நிலமையினை ஆராய்வதற்காக அண்மையில் இப்பாடசாலைக்கு விஜயம் செய்த மாகாண சபை உறுப்பினர் அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர்  ,பாடசாலை  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் புல் வளர்ந்து காணப்படும் சூழலையும் பார்வையிட்டார்.Sunday, April 29, 2012

கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி


கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதி வழங்கும் நோக்கில் சாய்ந்தமருது அல் இஸ்லாஹ் ஜும் ஆப் பள்ளிவாசல் இன்று  இரத்த தான நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இவ் இரத்ததான நிகழ்வில் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உணவகங்களுக்கு ” சிறந்த உணவு கையாள்வோர் விருது ”


சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள உணவகங்களுக்கு ” சிறந்த உணவு கையாள்வோர் விருது ” வழங்கும்  மற்றும் சுகவனம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு ஆகியன சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்  ஒழுங்கு செய்திருந்த மேற்படி நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி , டாக்டர்களான ஏ.டபிள்யு. எம்.சமீம்   , எம். இஸ்ஸதீன் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் , பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் எஸ். தஸ்தகீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டார்.

Saturday, April 28, 2012

சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு இளம் கவிஞர்களின் “ இனி வீசட்டும் தென்றல் “ என்ற கருப் பொருளில் கவியரங்கொன்று இன்று (2012.04.28) சனிக்கிழமை பாண்டிருப்பில் இடம்பெற்றது.


சித்திரை புதுவருடத்தினை முன்னிட்டு  இளம் கவிஞர்களின்  “ இனி வீசட்டும் தென்றல் “ என்ற  கருப் பொருளில் கவியரங்கொன்று இன்று  (2012.04.28)  சனிக்கிழமை  பாண்டிருப்பில் இடம்பெற்றது.

பாண்டிருப்பு  பிரதேச இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் தலைவர் எஸ்.துஷ்யந்திரனின் வழிகாட்டலில் கவியரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 கவிஞர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூத்த கவிஞரும் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளருமான மு.சடாச்சரம் அகரம் சமூக அமையத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை அண்மையில் அம்பாறை ஹேகொட ஸ்ரீ இந்திரசார மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


மத்திய சுற்றாடல் அதிகாரசபை கல்வியமைச்சுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை அண்மையில் அம்பாறை ஹேகொட ஸ்ரீ இந்திரசார மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
 மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஏ.ஸி.நஜீப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வண.ஹெடிகல்லே விமலசார தேரர் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன , கல்முனை வலய சுற்றாடல் ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.