Saturday, March 3, 2012

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று சகல பீடங்களுக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


2011 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று சகல பீடங்களுக்கும் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  அண்மையில் கல்லூரியில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 75 மாணவர்கள் ஆசிரியர்களினாலும் மாணவர்களினாலும் மாலையிட்டு வரவேற்றகப்பட்டனர்.
அம்பாறை  மாவட்டத்தில் கணிதபிரிவில் முதனிலை பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ள மாணவன் எம்.எச்.எம்.ஸஸ்னி இவ் வைபவத்தின் போது தங்களுக்கு முதலாம் தரம் முதல் இறுதி வரை கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பெற்றோருக்கும் நன்றியினை தெரிவித்தார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து இவ்வருடம் பொறியியல் பீடத்திற்கு 14 மாணவர்கள் உள்ளடங்கலாக 95 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இது இலங்கையிலுள்ள  முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் அம்பாறை மாவட்டத்திலும்  மிகச் சிறந்த பெறுபேறாகவும் வரலாற்று சாதனையாகவும் திகழ்கின்றது.





No comments:

Post a Comment