Thursday, March 15, 2012

ஏ.எப்.எம்.அஸ்றப் எழுதிய ” மகாகவியும் நீலாவணனும் ” புத்தக வெளியீட்டு விழா.


ஏ.எப்.எம்.அஸ்றப் எழுதிய ” மகாகவியும் நீலாவணனும் ” புத்தக வெளியீட்டு விழா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கலந்து கொண்டதோடு கலை கலாச்சால பீடாதிபதி எம்.எல்.எப். பழீல்ஹக் , புவியத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் விரிவுரையாளர்களும் மற்றும் தமிழ் சங்கத்தின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனர்.




Wednesday, March 14, 2012

சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி புதன் கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி புதன் கிழமை இடம்பெற்றது. கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஸி.யஹ்யாகான் மற்றும் கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.










Tuesday, March 13, 2012

நூருல் ஹுதா அகதியா பாடசாலையின் மீலாதுன் நபிதினவிழா.

நூருல் ஹுதா அகதியா பாடசாலையின் மீலாதுன் நபிதினவிழா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.




இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலோஜ் இன்று அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தார்




Monday, March 12, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் வர்தா இல்லம் ( பச்சை) 206 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் ,197 புள்ளிகளைப் பெற்று நிஸ்ரின் ( மஞ்சள்) இல்லம் இரண்டாம் இடத்தையும் , 144 புள்ளிகளைப் பெற்று ஜெஸ்மின் ( சிவப்பு) இல்லம் மூன்றாம் இடத்தையும் , 131 புள்ளிகளைப் பெற்று சபரான் ( நீலம்) இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
கல்லூரி மைதானத்தில் விளையாட்டுக் குழு பணிப்பாளர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஸீர் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் , முஸ்லிம் கோட்ட கல்வி அதிகாரி எஸ்.எல்.ஏ..றஹீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , கல்லூரியின் ஸ்தாபக அதிபர் எம்.ஸீ.ஏ.ஹமீட் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.













கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.


கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மின்னத் இல்லம் 330 புள்ளிகளைப்பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.எச்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் கல்முனை மாநகர மேயர் ஸிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும் , முஸ்லிம் கோட்ட கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் , கல்முனை வலய உடற்கல்வித்துறை உதவி கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உப பீடாதிபதி எம்.எச்.எம்.மன்சூர் , ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் ஜென்னத் இல்லம் 308 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , 295 புள்ளிகளைப் பெற்று நுஸ்ரத் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.










Saturday, March 10, 2012

கல்முனை நீதிமன்ற உத்தியோஸ்தர்களுக்கும் அக்கரைப்பற்று நீதி மன்ற உத்தியோஸ்தர்களுக்குமிடையிலான சினேக புர்வ 20 ற்கு 20 கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று கடந்த புதன் கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


கல்முனை நீதிமன்ற உத்தியோஸ்தர்களுக்கும் அக்கரைப்பற்று நீதி மன்ற உத்தியோஸ்தர்களுக்குமிடையிலான சினேக புர்வ 20 ற்கு 20 கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்று கடந்த புதன் கிழமை  கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை நீதிமன்ற உத்தியோஸ்தர் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்கரைப்பற்று நீதிமன்ற உத்தியோஸ்தர் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர். இப்போட்டியில் கல்முனை நீதி மன்ற உத்தியோஸ்தர் அணி 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
இக் கிறிக்கட் போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பீ. சுவர்ணராஜா பிரதம அதிதியாகவும் , கல்முனை நீதிமன்ற நீதவான் எம்.பி. மொஹிதீன் , அக்கரைப்பற்று நீதி மன்ற நீதவான் வீ. இராமகமலன் , கல்முனை நீதவான் நீதி மன்ற நீதவான் எம்.ஐ.எம்.றிஸ்வி  அம்பாறை நீதிமன்ற நீதவான் ரீ. சரவணராஜா மற்றும் சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
போட்டி நிகழ்வுகளை கல்முனை நீதி மன்ற லிகிதர் யு.எல்.எம்.அலீம் தொகுத்து வழங்கினார்.





Tuesday, March 6, 2012

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாதர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று மாலை கல்முனை மாநகர மேயரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் இடம்பெற்றது.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாதர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று மாலை கல்முனை மாநகர மேயரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையினை செல்வி வை.ருக்ஸானாவும் மேயரின் ஆலோசகர் ஏ. பீர்முஹம்மட் ” அரசியலில் இளம் முஸ்லிம் பெண்களை வலுவுட்டல் ”சம்பந்தமாகவும் ,கலைமகள் ஹிதாயா றிஸ்வி ” எதிர் நோக்கும் மகளிர் தினம் ” சம்பந்தமாகவும் சமூக அபிவிருத்தி மகளிர் அமைப்பின் தலைவி எஸ்.எம்.சுபைதா , வொலிவேரியன் மகளின் அமைப்பின் தலைவி ஐ.எல்.அமீதா , மறுமலர்ச்சி மகளிர் அமைப்பின் தலைவி வை. மௌஸானா , வதிவை , அனாதைகள் மற்றும் அங்கவீனர் அமைப்பின் தலைவி ஏ.எல்.சுவைதா ஆகியோரும்  கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் எம்.எச்.எம்.நபார் , கல்முனை மாநகர மேயரின் செயலாளர் நிஸாம் , மக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ்.எம்.எம்.பாறூக் , ஒருங்கிணைப்பாளர் சஹ்பி எச் இஸ்மாயில் , ஒருங்கிணைப்புச் செயலாளர் இன்ஸாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.