Tuesday, January 10, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி நிகழ்வு.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட  க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கே.எம்.ஏ.றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளின் பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் ,  சிறந்த சித்திபெற்ற மாணவிகளின் பெற்றோர்கள்  மற்றும் உயர்தர வகுப்பு மாணவிகளும்  கலந்து கொண்டனர்.

உயிரியல் விஞ்ஞான துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதனிலை பெற்ற   எம்.எம்.பாத்திமா ஸியாதா , கணித துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்ற ஏ.எம்.சிரின் சனூபர் மற்றும் கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்ற கே.ஹம்ஸியா காலிதா ஆகிய மாணவிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெறும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிக்கு இலவசமாக மக்கா சென்று புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.







No comments:

Post a Comment