Sunday, January 29, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு மற்றும் சிரமதான நிகழ்வுகள் நேற்று முன்தினம் வியாளக்கிழமை இடம்பெற்றது.


கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள் , கல்முனை இராணுவ முகாம் படை வீரர்கள் , கல்முனை பொலிஸார் , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இச்சிரமதான  நிகழ்வின் போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் கலந்து கொண்டதுடன் கல்லூரி விடுதி மாணவர்களின் பாவனைக்கென வழங்கப்பட்ட நுளம்பு வலைகளையும் பார்வையிட்டார்.
மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமும் இடம்பெற்றதுடன் டெங்கு நோய் ஒழிப்பு சம்பந்தமான துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.







அதிபர்கள் , ஆசிரியர்களின் பொறுப்பும் தலைமைத்துவப் பண்பும் – ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் ” எனும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவொன்று இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று மாலை இடம்பெற்றது.


 அதிபர்கள் , ஆசிரியர்களின் பொறுப்பும் தலைமைத்துவப் பண்பும் – ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் ” எனும் தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவொன்று இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று மாலை இடம்பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாடு கல்முனை வலய பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , கல்விமான்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோருக்கு ஒழுங்கு செய்திருந்த இந்த நிகழ்வு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் செயலாளர் எம்.வை.ஏ.பாவா தலைமையில் இடம்பெற்றது.
ஜாமியா நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஸ்செய்க் எஸ்.எச்.எம்.பளீல் சிறப்பு சொற்பொழிவினை நிகழ்த்தினார்.
கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸாக் , கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஸ்தாபக அதிபர் எம்.ஸி.ஏ. ஹமீட் உட்பட அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. பரீட்சை முடிவுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கணித பிரிவில் முதனிலை பெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் , உயிரியல் துறையில் முதனிலை பெற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மற்றும் கலைத்துறையில் முதனிலை பெற்ற நிந்தவுர் அல் அஸ்றக் தேசியக்கல்லூரி மாணவி ஆகியோர் பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







Tuesday, January 10, 2012

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி நிகழ்வு.


கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அண்மையில் வெளியிடப்பட்ட  க.பொ.த.உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தி பெற்ற மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கே.எம்.ஏ.றஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் விஞ்ஞான , கலை மற்றும் வர்த்தக பிரிவுகளின் பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் ,  சிறந்த சித்திபெற்ற மாணவிகளின் பெற்றோர்கள்  மற்றும் உயர்தர வகுப்பு மாணவிகளும்  கலந்து கொண்டனர்.

உயிரியல் விஞ்ஞான துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதனிலை பெற்ற   எம்.எம்.பாத்திமா ஸியாதா , கணித துறையில் மூன்று பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்ற ஏ.எம்.சிரின் சனூபர் மற்றும் கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்ற கே.ஹம்ஸியா காலிதா ஆகிய மாணவிகள் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெறும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிக்கு இலவசமாக மக்கா சென்று புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Tuesday, January 3, 2012

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விடுதி மாணவர்களின் பாவனைக்கென சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய ஒரு தொகுதி நுளம்பு வலைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயிலிடம் இன்று வழங்கி வைத்தனர்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக் தகுதி பெற்றுள்ளனர்.


அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி , எம்.எச்.எம்.முர்ஸித் உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத் கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட் மற்றும் எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் ” ஏ” சித்தி பெற்றுள்ளனர்.
பொறியியல் துறையில் 13 மாணவர்களும் மருத்துவ துறையில் மூன்று மாணவர்களும் விவசாய துறையில் 5 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான துறையில் 5 மாணவர்களும் பௌதீக விஞ்ஞான துறையில் 25 மாணவர்களும் வர்த்தக முகாமைத்துவ துறையில் 8 மாணவர்களும் கலைத்துறையில் 7 மாணவர்களும் எஞ்சிய மாணவர்கள் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கணித துறையில் எம்.எச்.எம்.ஸஸ்னி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 169 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் இக்கல்லூரியில் இருந்து பொறியில் துறைக்கு அம்பாறை மாவட்டத்தில் முதனிலை உட்பட 17 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Sunday, January 1, 2012

2012 புதிய வருடத்தினை முன்னிட்டு இன்று காலை சம்மாந்துறை இலங்கை வங்கி கிளையிலும் மக்கள் வங்கி கிளையிலும் பலவிதமான நிகழ்வுகள் இடம்பெற்றன.


2012 புதிய வருடத்தினை முன்னிட்டு  இன்று காலை சம்மாந்துறை இலங்கை வங்கி கிளையிலும் மக்கள் வங்கி கிளையிலும் பலவிதமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
சம்மாந்துறை இலங்கை வங்கி கிளையில் வங்கி முகாமையாளர் எம்.ஐ.நௌபல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை வங்கி அம்பாறை பிராந்திய முகாமையாளர் எஸ்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இன்று புதிய கணக்குகளை ஆரம்பித்த வாடிக்கையாளர் ஒருவருக்கு முச்சக்கர வண்டியொன்றினையும் ஏனைய பரிசில்களையும் வழங்கி வைத்தததுடன் சம்மாந்துறை மக்கள் வங்கி கிளையில் முகாமையாளர் எஸ்.எல் றஹ்மத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளிலும் சிசுஉதான சிறுவர் சேமிப்பு கணக்கு ஆரம்பித்த சிறுவர்களுக்கு புத்தகப்பைகளும் வழங்கப்பட்டன.