Saturday, December 31, 2011

அம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையைச் சேர்ந்த கங்கா திலகரெட்ன குமாரி.

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி வர்த்தக துறையில் அம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையைச் சேர்ந்த கங்கா திலகரெட்ன குமாரி 3 பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 13 வது இடத்தையும் பெற்றுள்ளார்.
அம்பாறை தமன பிரதேசத்தைச் சேர்ந்த கங்கா 6 ஆம் ஆண்டு முதல் 13 ம் ஆண்டு வரையும் அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையில் கல்வி கற்று வராவார்.


Friday, December 30, 2011

சாய்ந்தமருது ஒகஸ்போட் முன் பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்


சாய்ந்தமருது ஒகஸ்போட் முன் பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மாலை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
முன் பள்ளி அதிபர் ஜனாபா ஜமால்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் ஜெய்கா திட்ட ஆலோசகர் பொறியியலாளர் எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் முன் பள்ளி கல்வி திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.எல்.இப்றாஹிம் கௌரவ அதிதியாகவும் முன்பள்ளி கல்வி திணைக்கள இணைப்பாளர் ஐ.எல்.எம்.அனீஸ் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.நஸார்தீன் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
முன் பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.













கல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம்

கல்முனை இறைவெளி கண்டத்திலுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் றோயல் வித்தியாலயம் என்ற பெயரில் புதிய பாடசாலையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கான பெயர்பலகையை திரைநீக்கம் செய்த பின்னர் புதிய பாடசாலையை உத்தியோக புர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக் , பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல் , கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.





Thursday, December 29, 2011

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமி.



2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமியொருவர் 7 வருடங்களின் பின் தன்னுடைய பெற்றோரைத் தேடி வீடு வந்து சேர்ந்துள்ள சம்பவமொன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தான் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு வேறு ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தததாகவும். தனக்கு தேவையான சகல வசதிகளையும் தன்னை பராமரித்தவர்கள் செய்து தந்ததாகவும் , தன்னுடைய பெற்றோரை பார்க்க விரும்புவதாக தான் கூறிய போது அது சம்பந்தமான விடயங்களை அறிவதில் மிகவும் அக்கரை எடுத்து இன்று என்னை பெற்றவர்களை வந்தடைந்ததனை இட்டு இறைவனுக்கும் எனக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக 15 வயது நிரம்பி மேரி யுலந்தா தெரிவித்தார்.


சிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் சிங்கள பாடத்திற்கு தோற்றவில்லை!



அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரி மாணவிகள் இருவருக்கு உயர்தர பரீட்சையில் சிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சையில் தோற்றவில்லை என பரீட்சை முடிவுகள் கிடைத்துள்ளதால் மாணவிகள் இருவரும் அதிர்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசியக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான கலணி உத்தரா மற்றும் திலாணி சமரக்கோன் ஆகியோர் சிங்கள பாடத்திற்கு தோற்றியும் பரீட்சை முடிவுகளில் சிங்கள பாடத்திற்கு தோற்றவில்லை என முடிவுகள் கிடைத்துள்ளது.
பரீட்சைகள் முடிவடைந்து ஒரு வார காலத்தின் பின் சிங்கள பாட விடைப்பத்திரங்கள் இரண்டு கல்லூரியின் குப்பை கூடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பரீட்சை மேற்பார்வையாளரினால் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவை விடைப்பத்திரங்கள் திருத்தப்படும் போது சேர்த்துக் கொள்ளப்படாமல் விடப்பட்டிருக்கலாம். இருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் மாணவிகளின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்துள்ளது. அதிகாரிகள் விடும் தவறினால் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ககை நடாத்தும் எங்களது பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
மாணவியான நிலிணி திலாணி சமரக்கோன் அரசியல் பாடத்தில் ” பீ ” சித்தியையும் , பௌத்த நாகரீகத்தில் ” ஏ” சித்தியையும் பெற்றுள்ளதோடு சிங்கள பாடத்தில் தனக்கு ” ஏ ” அல்லது ” பீ ” கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதோடு , மற்றைய மாணவியான கலணி உத்தரா  தகவல் தொழில்நுட்பவியலில் ” பீ ” சித்தியும் அரசியலில் ” பீ ” சித்தியும் பெற்றுள்ளதோடு சிங்கள பாடத்தில் ” பீ ” சித்தி கிடைக்குமென எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய உத்தியோஸ்தர் அநாதரவாக கிடந்த விடைப்பத்திரங்கள் யாருடையது என பரீட்சை மண்டபத்தில் பரீட்சை முடிந்த உடனே கேட்டிருந்தால் அவை தங்களுடையது என கூறியிருந்திருப்போம் . இப்போது தோன்றியுள்ள பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது என பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவியான  கலணி உத்தராவின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதி  சந்திரதாச தெரிவிக்கையில் அப்போது பத்திரிகைகளில் இந்த செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இவ்விடைப்பத்திரங்கள் தனது மகளுடையது தான் என தெரியாமல் போய் விட்டது. பரீட்சை முடிவுகள் வெளியிட்ட பின்னர் தொலைபேசி மூலமாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவுடன் கதைத்தபோது இவ்விடயம் சம்பந்தமாக தான் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார் என்று குறிப்பிட்டார்.

Wednesday, December 28, 2011

அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது


அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கரையோரத்தினையும் கடல் காவு கொண்டு வருகின்றது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 7 வருடங்கள் புர்த்தியடையும் இந்நாளில் கடல் கொந்தளிப்பும் கடலரிப்பும் பிரதேச மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.
கடந்த வாரம் பெய்த பலத்த மழையினை தொடர்ந்து சீரான காலநிலை காணப்படுவதோடு இரவில் கூடுதலான குளிர் நிலவுகின்றது.
நாளுக்கு நாள் சாய்ந்தமருது , கல்முனைக்குடி , நிந்தவுர் மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடவரிப்பு மிகவும் மோசமடைந்து கொண்டு வருகின்றது. இன்று காலையில் இருந்த கடல் அரிப்பை விடலும்  இன்று இரவு இதன் நிலமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடலை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் பீதி காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது உடைந்த கட்டிடங்களின் இடிபாடுகள் சில தற்போது ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளன.
இதனை பார்வையிடுவதற்காக அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து மக்கள் கல்முனை பிரதேசத்திற்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.





” திசை மாறியபறவை” குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு





இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக தமிழ்ச் சங்கம் ஒழுங்கு செய்திருந்த         ” திசை மாறியபறவை”  குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக கலைபீட திரைக்கூடத்தில்இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அம்பாறை மாவட்டத்தில் கணிதப்பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முஹம்மது ஹனீபா ஸஸ்னியும் உயிரியல் துறையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மீராமுகைதீன் பாத்திமா ஸியாதாவும் முதலாம் நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த.உயர்தர பரீட்சைமுடிவுகளின் படி அம்பாறை மாவட்டத்தில்  கணிதப்பிரிவில்கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முஹம்மதுஹனீபா ஸஸ்னியும் உயிரியல் துறையில் கல்முனை மஹ்மூத்மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மீராமுகைதீன் பாத்திமா ஸியாதாவும்முதலாம் நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கணிதப்பிரிவில் சாய்ந்தமருதைப்பிறப்பிடமாகக் கொண்டமுஹம்மது ஸஸ்னி  இணைந்த கணிதம் , பௌதீகவியல் மற்றும்இரசாயனவியல் பாடங்களில் அதிதிறமைச்சித்திகளைப்பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 169 ஆவது இடத்தையும் பெற்றுபொறியியல் துறைக்கு செல்லும் தகுதியினைப் பெற்றுள்ளார்.உயிரியல் விஞ்ஞான துறையில் சம்மாந்துறையைச் சேர்ந்தமீராமுகைதீன் பாத்திமா ஸியாதா  உயிரியல் , பௌதீகவியல் மற்றும்இரசாயனவியல் பாடங்களில் அதி திறமைச்சித்திகளைப் பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் 60 வது இடத்தையும் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பை பெற்றுள்ளார்.கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இருந்து கடந்த வருடம் 17மாணவர்கள் பொறியியல்  பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.