Saturday, July 23, 2011

“ரைவ்கிரின்” வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் செய்ற்பா

கல்முனை - அம்பாறை வீதியிலுள்ள வளத்தாப்பிட்டியில் அமைந்துள்ள “ரைவ்கிரின்” வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் செய்ற்பாடு கடந்த  ஜுலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து டீசல் மற்றும் பெற்றோல் வாகனங்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் திங்கடகிழமை  தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8.00 மணி  முதல்  மாலை 6.30 மணி வரை  புகைபரிசோதனை நிலையத்திற்கு சென்று வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றிதழை பெற்ற பின்னர் தமது பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள வாகான போக்குவரத்து பிரிவில் சான்றிதழை சமர்ப்பித்து வாகன அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்கின்றனர்.வாகன போக்கு வரத்துப் பொலிஸார் வீதி பரிசோதனையின் போது வாகன அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் புகைபரிசோதனை சான்றிதழையும் பரிசோதிக்கின்றனர் புகைபரிசோதனை சான்றிதழ் சமர்பிக்காதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. புகைபரிசோதனை சான்றிதழ் இருந்தும் வாகனத்திலிருந்து புகை வெளியேறுமேயானால் புகைபரிசோதனை சான்றிதழ் இரத்து செய்யப்டுமென மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் பி. சீ. எல். தர்மபிரிய தெரிவித்துள்ளார்.சுற்றாடல் அமைச்சு, மோட்டார் வாகன தினணக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் கூட்டாக இணைந்து எமது நாட்டில் சூழல் மாசடைவதனை தடுப்பதற்கும் எரிபொருட்கள் வீண்விரயமாவதை தவிர்ப்பதற்காகவுமே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. பெற்றோல் மற்றும் டீசலில் காணப்படும் காபன், ஐதரோ காபன், காபன் மொனோ ஒட்சைட்டு போன்றவை பற்றியே புகைபரிசோதனையின் போது கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. வீவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இப்புகைபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லையென மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது.






No comments:

Post a Comment