Wednesday, July 13, 2011

” உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள் ”

இலங்கையில் தேசிய நோய்த்தடுப்பு திட்டம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவதற்றகான ” உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள் ” எனும் தொனிப்பொருளில்  அம்பாறை மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்குமான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று அம்பாறை  பிரதேச சுகாதார சேவைகள்பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் சேனக தனகல தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுனர் டாக்டர் சுதத் பீரிஸ் ஸ்ரீலங்கா ஊடகவியலாளர் கல்வியகத்தின் செய்தி ஆலோசகர் எம்.எஸ்.எம்.ஐயுப்  , யுனிசெப்  அமைப்பின் பிரதம தொடர்பாடல் அதிகாரி மேர்வின் பிளெச்சர மற்றும் அம்பாறை பிரதேச தொற்றுநோய் நிபுணர் டாக்டர்  இரேஸா விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த
னர்.






No comments:

Post a Comment