Thursday, July 7, 2011

குடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட தாருஸ் ஸலாம் மகா வித்தியாலய மாணவர்களில் சிலர் நேற்று காலையில் பாடசாலையிலுள்ள குடிநீரை அருந்தியதால் மயக்கமுற்ற நிலையில் சம்மாந்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பாடசாலை ஆரம்பித்து சில மணி நேரத்தின் பின்னர் பாடசாலையிலுள்ள குடிநீரை அருந்திய பின்னர் வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் வாந்தியெடுப்பது அவதானிக்கப்படு சிறிது நேரத்தில் மாணவர்கள் மயக்கமடைய ஆரம்பித்தனர்.மயக்கமுற்ற மாணவர்களும் நீரை அருந்திய மாணவர்களுமாக நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மாணவர்களின் சிறுநீரும் இரத்தமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.பின்னர் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் பாடசாலைக்கு சென்று குடி நீரின் மாதிரியைப்பெற்று இரசாயன பகுப்பாய்வு பிரிவிற்கு அனுப்பியுள்ளனர்.குடிநீரில் ஏதாவது நச்சுப்பொருள் கலந்திருக்கலாம் என வைத்திய அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர். மயக்கமுற்ற மாணவர்கள் படிப்படியாக தேறி வருவதாகவும் இதுவரை எந்த உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment