Friday, July 1, 2011

மக்கள் வங்கியின் 50 ஆண்டுகள் பொன்விழா.

மக்கள் வங்கியின் 50 ஆண்டுகள் பொன்விழாவை முன்னிட்டு  இன்று  கல்முனை மக்கள் வங்கி கிளையில்

கிளைமுகாமையாளர் எம்.ஐ.எம்.பதுறுதீன் தலைமையில் சர்வ சமய பிரார்த்தனைகளுடன்  பல நிகழ்வுகள் இடம்பெற்றன. பாராளுமன்ற உறுப்பினர்களான  பைஸால் காசிம்  ,  எம்.ரி.ஹஸன் அலி  ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சமய பெரியார்களுக்கு அன்பளிப்புகளை வழங்கியதுடன்  50 ஆண்டுகள் பொன்விழா ஞாபகார்த்த மலரும் வெளியட்டு வைக்கப்பட்டது.  நிகழ்வின் இறுதியில் 50  காற்றூதப்பட்ட அதிஸ்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.. சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளையிலும்  கிளை முகாமையாளர் எம்.ஸி.எம்.ஹனீபா தலைமையில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்ற போது  பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட அதிதிகளும் வாடிக்கையாளர்களும்   கலந்து கொண்டனர்.
1961 ஆம் ஆண்டு ஜுலை மாதம் மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு   50 ஆண்டுகள் புர்த்தியடையும் நிலையில் இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றுக் காணப்படுவதற்கு காரணமாக அமைந்த அரசியல் தலைவர்களினதும் ஏனையவரகளினதும் புகைப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட நிகழ்வு விசேடமாக அமைந்திருந்தது.










No comments:

Post a Comment