Friday, July 8, 2011
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 31 வருட நிறைவு.
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 31 வருட நிறைவினை முன்னிட்டு வொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்ற கிறிக்கட் போட்டியில் சாயந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் 5 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று அகில இலங்கை இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் எம்.எஸ்.ஹக்கீம் வழங்கிய வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 30 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தினர் 27 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment