Tuesday, July 12, 2011

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்களையும் உடற்கல்வித்துறை ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனையில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்படடிருந்தது.

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று  சாதனை ஏற்படுத்தி  தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த  30 மாணவர்களையும்  உடற்கல்வித்துறை ஆசிரியர்களையும்  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனையில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்படடிருந்தது.
கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில்  சாதனை வீரர்களுக்கும்  சாதனையை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்த உடற்கல்வித்துறை ஆசிரியர்களும் மாலை அணிவித்து  வாகனமொன்றில் கல்முனை , கல்முனைக்குடி , சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில்  பாண்ட் வாத்தியம் முழங்க  பட்டாசு வெடிச்சத்தங்களுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

கல்முனை நகரை  அடைந்த வீரர்கள் கல்முனை வலய கல்வி பணிமனையில் கணக்காளர் எச்.எம்.ஏ.றஸீட் மற்றும் பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீலினாலும் வரவேற்கப்பட்டனர்.
கல்முனைக்குடியில் வைத்து கல்முனை பிரிலியனட் விளையாட்டுக்கழக செயலாளர் எஸ்.ரி . எம். பஸ்வாக் மற்றும் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட பயிறறுவிப்பாளர்  எம்.எஸ்.எம். பளீல்  உட்பட கழக வீரர்களாலும்  வரவேற்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில்  19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் சம்பியன்களாகவும் , 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான  100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஏ.எம்.ஜப்ரான்  தங்கப்பதக்கங்களைப்பெற்று  17 வயதுப்பிரிவில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன்  17 வயதுப்பிரிவில் எஸ்.எப்.சர்ஜுன் 110 மீற்றர் தடைதாண்டலிலும்  15 வயதுப்பிரிவில்  எம்.ஏ.எம்.றஸ்பாஸ்  110 மீற்றர் தடைதாண்டலிலும் தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர் , 19 வயதுப்பிரில் எம்.ஏ.ஏ. நஸ்மி 100 மீற்றர் , 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளிலும் ,  21 வயதுப்பிரிவில் ஆர். எம். இர்பாத் 200 மீற்றரிலும்  17 வயதுப்பிரிவில் அஞ்சலோட்டப்போட்டியிலும்  வெள்ளிப்பதக்கங்களையும் ஏனைய போட்டிகளில் 5 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மொத்தமாக 30 மாணவர்கள் இம்முறை நடைபெறவுள்ள தேசிய மட்டப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியின் வெற்றிக்கு காரணமான மாணவர்களுக்கும்  பயிற்றுவித்த உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் , பிரதியதிபர் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , பழைய மாணவர்சங்க பிரதிநிதகள்  மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்   பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.







No comments:

Post a Comment