Saturday, July 2, 2011

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைஸால் காசிம் அவர்களின் அழைப்பின் பேரில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று ( 2.07.2011) பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பல ஆண்டு காலமாக எதிர்நோக்கி வந்த காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைஸால் காசிம் அவர்களின் அழைப்பின் பேரில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்  இன்று ( 2.07.2011) பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தார்.
பொத்துவில் பிரதேச செயலாளர் யு.எல்.நியாஸ்  தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹஸனலி  , அமைச்சின் மேலதிக செயலாளர்  அசோகா பீரிஸ் , காணிகள் ஆணையாளர்   ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ   , வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் , கமநலசேவை மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள்  பிரதேச சபை தவிசாளர் , பிரதிநிதிகள் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த 7 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வேகாமம் கண்டம் , துக்கொள்ள கண்டம் ,  ஆமவட்டுவான கண்டம் ,  தங்கப்பிள்ளை கணத்த கண்டம் , செங்காமம் ,  கிரான்கோமாரி , தஹராம்பளை கண்டம் போன்ற இடங்களில் விவசாய செய்கையில் ஈடுபட்டுவந்த விவசாயிகளை தமது காணியில் விவசாயம் செய்யவிடாமல் வனபரிபாலன திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள விவசாய தடையை நீக்கி சுதந்தரமாக தங்களை  விவசாய நடவடிக்கையில் ஈடுபட அனுமதி தருமாறு  விவசாயிகள் இந்த கலந்துரையாடலின் போது அமைச்சரிடம் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் மாதம்  4, 5 , 6  ஆம் திகதிகளில் சம்பந்தப்பட்ட சகல பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் சந்தித்து  தமது அமைச்சின் அதிகாரிகள் மூலமாக இக்காணிப்பிச்சினைக்கான தீர்வை  பெற்றுக்கொடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்
மிக நீண்டகாலமாக நிலவிய பொத்துவில் பிரதேச விவசாயிகளின் காணிப்பிரச்சனையொன்றை தீர்த்து வைப்பதற்காக காணியமைச்சரொருவர்  இப்பிரதேசத்திற்கு வருகை தந்தது இதுவே  முதற் தடவையாகும் என விவசாயிகள் கூறியதுடன் அமைச்சரை அழைத்து வருவதற்கு காரணமாக அமைந்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.







No comments:

Post a Comment