Thursday, July 7, 2011

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான  19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி உள்ளக அரங்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி போட்டியின் போதே கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வெற்றி பெற்றது.
சாய்ந்தமருது கோட்டமட்டம்  , கல்முனை கல்வி வலய மட்டம் , கல்முனை மாவட்ட மட்டம் என்பவற்றில் தொடர்சியாக சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள இக்கல்லூரி  மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க ஒரு நிகழ்வாகும் என கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்ததுடன் இம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களான எம்.ஏ.சலாம் மற்றும் ஏ.எம்.பைஸர்  ,  உடற்கல்வித்துறை ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சார்பில்  ஏ.ஏ.எம்.அஸ்ஜாத் ,ஏ.எச்.எம்.றிப்கி றிகாஸ் , ஏ.ஏ.ஸெயிட் ,எஸ்.எல்.எம். சுதான் , ஏ.எம்.ஸாக்கிர் ,  எம்.எம்.எம்.சக்கி , ஏ. நிபராஸ் அஹமட்  ஆகிய மாணவர்களே தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment