Saturday, July 23, 2011
“ரைவ்கிரின்” வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் செய்ற்பா
கல்முனை - அம்பாறை வீதியிலுள்ள வளத்தாப்பிட்டியில் அமைந்துள்ள “ரைவ்கிரின்” வாகன புகை பரிசோதனை நிலையத்தில் வாகனங்களுக்கான புகை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கும் செய்ற்பாடு கடந்த ஜுலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்து டீசல் மற்றும் பெற்றோல் வாகனங்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் திங்கடகிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 8.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை புகைபரிசோதனை நிலையத்திற்கு சென்று வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றிதழை பெற்ற பின்னர் தமது பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள வாகான போக்குவரத்து பிரிவில் சான்றிதழை சமர்ப்பித்து வாகன அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்கின்றனர்.வாகன போக்கு வரத்துப் பொலிஸார் வீதி பரிசோதனையின் போது வாகன அனுமதிப்பத்திரம், காப்புறுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் புகைபரிசோதனை சான்றிதழையும் பரிசோதிக்கின்றனர் புகைபரிசோதனை சான்றிதழ் சமர்பிக்காதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. புகைபரிசோதனை சான்றிதழ் இருந்தும் வாகனத்திலிருந்து புகை வெளியேறுமேயானால் புகைபரிசோதனை சான்றிதழ் இரத்து செய்யப்டுமென மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் பி. சீ. எல். தர்மபிரிய தெரிவித்துள்ளார்.சுற்றாடல் அமைச்சு, மோட்டார் வாகன தினணக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் கூட்டாக இணைந்து எமது நாட்டில் சூழல் மாசடைவதனை தடுப்பதற்கும் எரிபொருட்கள் வீண்விரயமாவதை தவிர்ப்பதற்காகவுமே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. பெற்றோல் மற்றும் டீசலில் காணப்படும் காபன், ஐதரோ காபன், காபன் மொனோ ஒட்சைட்டு போன்றவை பற்றியே புகைபரிசோதனையின் போது கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது. வீவசாய நோக்கத்திற்காக பயன்படுத்தும் நோக்கில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இப்புகைபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லையென மோட்டார் வாகன திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் (14.7.2011) வியாளக்கிழமை சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
புதிய தவிசாளராக எம்.எம்..ஜுனைதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நிர்வாக பணிப்பாளராக யு.கே..காலித்தீனும் நிதிப்பணிப்பாளராக எம்.ஏ.சி. நஜீமும் ஏனைய உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இயற்கை மருத்துவம் பற்றிய நூலும் வெளியட்டு வைக்கப்பட்டது.
இலங்கையில் ஆங்கில மருத்துவத்தில் இருந்த நாட்டம் படிப்படியாக குறைந்து இயற்கை மருந்துகளின் பக்கம் மக்களின் நாட்டம் அதிகரித்து வருவதனை தொடர்ந்து இந்தியா DXN நிறுவனத்தின் ஏற்பாட்டில் இயற்கை மூலிகையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்தியா DXN நிறுவனத்தின் ஆலோசகர் திருமதி ஜெயந்தி சதாசிவம் , சிகையலங்கார போதனாசிரியை பவானி முத்தையா , இலங்கைக்கான பிரதிநிதிகளான எம.எம்.கே.முஸ்தாக் மற்றும் நியாஸ் இஸ்மாயில் ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்தியதுடன் இயற்கை மருத்துவம் பற்றிய நூலும் வெளியட்டு வைக்கப்பட்டது.
இராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.
கல்முனை பிரதேசத்தின் சாய்ந்தமருது கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (17.07.2011) இராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.
கோழிக்கள்ளச்சுறா என அழைக்கப்படும் இம்மீன் இனம் சுமார் 10 தொடக்கம் 15 அடி நீளம் கொண்டதுடன் கிட்டத்தட்ட 1000 கிலோ எடையும் கொண்டதாக காணப்பட்டது.
இம்மீனை மீனவர்கள் மிகச்சிரமப்பட்டு கயிற்றினால் கட்டி கரைக்கு இழுத்துக் கொண்ட வந்தனர்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட பதில் பீடாதிபதியும் விளையாட்டு ஆலோசனை பேரவையின் பணிப்பாளருமான கலாநிதி ஏ. ஜௌபரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறை பொறுப்பாளர் எம்.எல்.ஏ. தாஹிரின் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் , பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பிரசன்யமாகி இருந்தார்கள்.
இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ , வயம்ப , பேராதனை , கொழும்பு , களணி , சப்ரகமுவ , யாழ்ப்பாணம் , ரஜரட்ட , மொரட்டுவ , ஸ்ரீ ஜயவர்த்தன புர மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீர வீராங்கனைகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது
மாவடிப்பள்ளி வில் ரு வின் ( will to win ) விளையாட்டுக்கழகத்தின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி மாவடிப்பள்ளி மையோன் வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்ற 8 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட கல்முனை றியல் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் 2.4 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இறுதிப்போட்டிக்கு மாவடிப்பள்ளி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் யாக்கூப் ஏ ஹஸன் பிரதம அதிதியாகவும் , மாவடிப்பள்ளி அஸாம் கோ நிறுவன பணிப்பாளர் மஹ்முத் ஏ மஜீட் மற்றும் காரைதீவு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ. நிஸந்தன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கழகங்களுக்கு கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.
சாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருதது மேற்கு கரைவாகு வட்டையில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது மேற்கு கரைவாகு வட்டையில் நெற் பயிர் செய்கை பண்ண முடியாது கைவிடப்பட்ட நிலத்தை அந்த நிலத்திறகு உரித்துடைய மக்கள் மண் போட்டு நிரப்பி அவ்விடத்தை மேட்டு நிலமாக மாற்றி மேட்டு நிலப்பயிர் செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இந்த முயற்சியினை விவசாய திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதனை தொடர்ந்து அக்காணிக்குச் சொந்தக்காரர்களான பெரும் திறளான மக்கள் அவ்வதிகாரிகளுக்கு எதிராக நேற்று வொலிவேரியன் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர்..
மஹிந்தச் சிந்தனையின் கீழ் மேட்டு நிலப்பயிர் செய்கையை மேற்கொள்ள வழி விடு. ஏன் எங்களுக்க மட்டும் இந்தப் பராபட்சம். போன்ற கோசங்களை கொண்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைத்திருந்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் திடீரென அந்த இடத்திற்கு விஜயம் செய்து ஜனாதிபதியுடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இது சம்பந்தமாக கதைத்து ஒரு முடிவினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் ஆண்களும் பெண்களும் பெரும் தொகையில் கலந்து கொண்டது முக்கிய அம்ஸமாகு
Wednesday, July 13, 2011
2010 ஆம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 6 மாணவர்கள் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரின் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
2010 ஆம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 6 மாணவர்கள் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரின் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி தரணி இந்திரன் , களுத்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரி பாஸிதா பாறூக் , கொழும்பு ரோயல் கலலூரி நவீன் பிரேமரெட்ண , கொழும்பு ஆனந்தா கலலூரி சனுயா எதிரிசிங்க , காலி மஹிந்த கல்லூரி லலித் நவோதய , கொழும்பு விசாகா பாளிகா கல்லூரி கலணி பசிசர ஆகிய மாணவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு ஜப்பான் சென்றவர்களாவார்கள்.
இம் மாணவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஜப்பான் மொழி கற்பிக்கப்பட்டது.
ஒரு மாத காலம் ஜப்பான் நாட்டில் தங்கியிருந்து பல இடங்களையும் தரிசிப்பதுடன் கலாசார முக்கியத்துவம் பெற்ற இடங்களையும் பார்வையிடவுள்ளனர்.
இச்சுற்றுலாவில் இலங்கையின் மூவின மாணவர்களும் கலந்து கொள்வது சிறப்பம்சமாகும்.

” உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள் ”
இலங்கையில் தேசிய நோய்த்தடுப்பு திட்டம் மீதான நம்பிக்கையை மீள கட்டியெழுப்புவதற்றகான ” உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள் ” எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்குமான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று அம்பாறை பிரதேச சுகாதார சேவைகள்பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் சேனக தனகல தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுனர் டாக்டர் சுதத் பீரிஸ் , ஸ்ரீலங்கா ஊடகவியலாளர் கல்வியகத்தின் செய்தி ஆலோசகர் எம்.எஸ்.எம்.ஐயுப் , யுனிசெப் அமைப்பின் பிரதம தொடர்பாடல் அதிகாரி மேர்வின் பிளெச்சர மற்றும் அம்பாறை பிரதேச தொற்றுநோய் நிபுணர் டாக்டர் இரேஸா விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

Subscribe to:
Posts (Atom)