தேசிய ரீதியில் மாகாணங்களுக்கிடையில் நடைபெற்ற மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழக வீர்ர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாண அணி இரண்டாவது இடத்தை பெற்று கல்முனை நகருக்கு வந்த போது நகரில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.மாகாணங்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டி கொழும்பு ரொறிங்டன் மைதானத்தில் நடைபெற்ற போது இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட தென் மாகாண அணி 15 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி (சனிமௌன்ட்) 15 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டனர்.முதலாவது போட்டியில் கிழக்கு மாகாண அணி ஊவா மகாண அணியுடன் போட்டியில் ஈடுபட்டு 15 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்று 1 விக்கட்டினாலும் , மத்திய மாகாண அணியுடன் போட்டியில் ஈடுபட்டு 4 விக்கட்டுக்களினாலும் வெற்றியீட்டியதனாலேயே இறுதிப் போட்டியில் தென் மாகாண அணியுடன் போட்டியில் ஈடுபடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொண்டது.தேசிய ரீதியல் இரண்டாவது இடத்தைப் பெற்ற கிழக்கு மாகாண அணி வீர்ர்களை (சனிமௌன்ட்) கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்கள் , அரசியல் பிரமுகர்கள் , வர்த்தகர்கள் மற்றும் விளையாட்டுதுறை சார்ந்த உத்தியோஸ்தர்கள் மாலையிட்டு பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்
No comments:
Post a Comment