Saturday, June 11, 2011

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள விவசாயிகளின் உற்பத்தி அறிவினை மேம்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கொரிய சர்வதேச விவசாய நிறுவனம் முன்வந்துள்ளது.


வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள விவசாயிகளின் உற்பத்தி அறிவினை மேம்படுத்தும் வகையில்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கொரிய சர்வதேச விவசாய நிறுவனம் முன்வந்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும்  தற்போது மேற்கொள்ளப்படும்  விவசாய முறைகளில் அதிகானவை பாரம்பரிய விவசாய செய்கையினை அடிப்படையாகக் கொண்டே  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் முயற்சிககேற்ற வருமானம் கிடைப்பதில்லை.
இதனை தற்போதய நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு அமைவாக செயற்படுத்தி  அதன் மூலம்  விவசாயிகளுக்கு கூடியளவு  வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும்  வழிமுறைகள் இச் செயல் திட்டத்தின் மூலம் வழங்கப்படவுள்ளன.
விவசாய அமைச்சுடன் இணைந்து கொரிய சர்வதேச விவசாய நிறுவனம் முன்னெடுத்துச் செல்லவுள்ள  இத்திட்டத்தின் கீழ்  நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள  விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும்  நிறுவனத்தின் பிரதி நிதிகள்  விஜயம் செய்து அவ்வப்பகுதியில் நிலவும்  விவசாய செய்கை முறைகளை அவதானித்து அதற்கான பரிகார திட்டங்களையும் அமுல் படுத்தவுள்ளனர்.
இத்திட்டத்திற்கென கொரிய சர்வதேச விவசாய நிறுவனம் வருடம் தோறும் 20 மில்லியன் ரூபாய்களை செலவு செய்யவுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த அமித்தியகொட தெரிவித்தார்.

No comments:

Post a Comment