Tuesday, June 21, 2011

நாட்டின் பலபகுதிகளிலும் தக்காளியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் இலட்சக்கணக்கான கிலோ தக்காளிகளை குப்பைகளில் கொட்ட வேண்டிய நிலையொன்று விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.


நாட்டின் பலபகுதிகளிலும் தக்காளியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் இலட்சக்கணக்கான கிலோ தக்காளிகளை குப்பைகளில் கொட்ட வேண்டிய நிலையொன்று விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
தக்காளியின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில்  அதன் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதனால் அதனை பழுதடையாமல் பாதுகாப்பாக வைத்திருக்க்க்கூடிய குளிருட்டல் வசதியில்லாத காரணத்தினால் கடந்த சில வாரங்களாக கிலோவொன்று 15 ரூபா தொடக்கம் 20 ரூபா விற்கு விற்பனை செய்யப்பட்டுவந்த தக்காளி தற்போது 5 ருபாவிற்கும் தேவையில்லை என்ற நிலையொன்று தோன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
வெலிமட , வலப்பனை , ஹந்துரந்கென , ரிகில்ல மற்றும் கஸ்கட போன்ற இடங்களில் வீதியின் இருமருங்கிலும் அழுகிய நிலையில் பல்லாயிரக்கணக்கான தக்காளிகள் குப்பையில்  கொட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment